districts

img

செஸ் போட்டி: அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்

மதுரை. செப்.8- மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் அமெரிக்கன் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது. மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ்  போட்டி செப்.5-ஆம் தேதி முதல் செப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது. நான்கு மாவட்டங்களில் உள்ள  கல்லூரிகளில் இருந்து சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். ரவுண்ட் ராபின் முறைப்படி நடந்த பல்வேறு போட்டிகளில் ஆண்கள் பிரிவில்  அனைவரையும் வென்று மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவர் யு. குமரேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட சுமார் 100 மாணவிகளில் டோக்பெருமாட்டி கல்லூரி மாணவி பத்மபிர திபா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர், உடற்கல்வி இயக்குநர் மு.பாலகிருஷ்ணன், நிதிக்காப்பாளர்  எம்.பியூலா ரூபி கமலம், துணை முதல்வர்  அ.மார்டின் டேவிட், டோக்பெருமாட்டி கல்லூரி முதல்வர்  கிறிஸ்டீனா சிங் மற்றும் மதுரை காமரசர் பல்கலைகழக உடற்கல்வி இயக்குநர் ஏ.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்தினர்.