districts

மதுரை முக்கிய செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு திறப்பு

தஞ்சாவூர், செப்.17 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.506 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங் கினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வியாழக்கிழமை திறந்து வைத் தார்.  பின்னர் ஆட்சியர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி நமது  மாவட்டத்தில் புதிய மின்னணு வாக்குப்ப திவு இயந்திரக் கிடங்கு பொதுப்பணி துறை  மூலம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த இயந்திர கிடங்கு 32680 ச.அ  மொத்த பரப்பளவில் தரை தளம் 7,944 ச.அ  பரப்பளவிலும் முதல் தளம் 7,944 ச.அ பரப்பள விலும் முகப்பு மண்டபம் 183 ச.அ பரப்பளவி லும் என மொத்தம் 16,071 ச.அ பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.  மேலும் தரைத்தளம் மற்றும் முதல் தளம் ஆகியவற்றில் தலா ஒரு பாதுகாப்பு அறை, கழிவறையுடன் கூடிய காவலர் ஓய்வறை, பணியாளர்களுக்கான கழிப்பறை, மின்தூக்கி, படிக்கட்டுகள், முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை அறை ஆகி யவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில்  5040 எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவி களும், 9320 எண்ணிக்கையிலான வாக்குப்ப திவு எந்திரங்களும், 4924 எண்ணிக்கையிலான விவிபேட் (வாக்காளர்கள் யாருக்கு வாக்க ளித்தோம் என்பதை கண்டறியும் கருவி) ஆகி யவை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக கட்டப்பட்டுள்ளது” என்றார்.

உழவன் செயலி மூலம்  விவசாயிகள் பயன் பெறலாம்

திருவாரூர் ஆட்சியர் தகவல்

திருவாரூர், செப்.17- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக் கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியி யல் துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங் கள் குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகை யில் உழவன் செயலி அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. உழவன் செயலியைப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறலாம். அதன் பயன்பாடுகளைப் பொருத்த வரை பதிவிறக்கம் செய்யப் பட்ட செயலியில் தங்களது  அடிப்படை தகவல்களான பெயர், முகவரி, செல்லி டைப்பேசி எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து உழவன் செயலியைப் பயன்படுத்தலாம். உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக் கலை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் கிராம ஊரா ட்சிக்கு வருகை தரும் விவரங் களை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம். மானியத் திட்டங்கள், இடுபொருள் முன் பதிவு, பயிர் காப்பீடு விவரம், உரங் கள் இருப்புநிலை, விதை இருப்புநிலை, வேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையம், சந்தை விலை நில வரம், வானிலை அறிவுரை கள், உழவர் அலுவலர் தொடர்புதிட்டம், பண்ணை வழிகாட்டி, பண்ணை பொ ருட்கள், இயற்கை பண்ணை  பொருட்கள், உழவர் உற்பத் தியாளர் அமைப்பு பொருட் கள், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், கருத்துகள், பூச்சி,நோய் கண்காணிப்பு, பரிந்துரை, அட்மாபயிற்சி மற்றும் செயல் விளக்கம், உழவன் இ-சந்தை  மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை போன்ற 19  வகையான பயன்பாடு களை எளிதில் அறிந்து கொள்ளலாம் என திருவாரூர்  மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காரங்குடாவில் மகளிர் கடல் மீனவர்  கூட்டுறவு சங்கம் தொடங்க கோரிக்கை

தஞ்சாவூர், செப்.17- தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் காரங்குடா மீனவர் வலை பின்னும் கூடத்தில், தஞ்சை மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) ஆண்டு  பேரவைக் கூட்டம், மாவட்டத் தலைவர் கே.குத்புதீன் தலைமையில் நடைபெற்றது.  தம்பிக்கோட்டை எம்.வி.ராஜேந்திரன், பொரு ளாளர் ஆர்.கர்த்தர், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெய பால், மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மணல் மாட்டு வண்டி  சங்கம் தலைவர் கே.சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  சங்கத்தின் கவுரவத் தலைவராக கே.குத்புதீன், செயலாளராக ஆர்.கர்த்தர், பொருளாளராக எம்.சுதா கர், துணைச் செயலாளர்களாக தயார் சுல்தான், ரஜபு நிஷா, துணைத் தலைவர்களாக எம்.வி.ராஜேந்திரன், மும்தாஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய  நிர்வாகிகளை வாழ்த்தி தமிழ்நாடு மீன்பிடித் தொழிற் சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாநில பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி பேசினார். கூட்டத்தில், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் காரங்கு டாவில், புதிய மகளிர் கடல் மீனவர் கூட்டுறவு சங்கம் தொடங்க வேண்டும். 55 வயது நிறைவடைந்த பெண், 60  வயது நிறைவடைந்த ஆண் மீனவர்களுக்கு மாதாந் திர ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மீன வர் உரிமையைப் பறிக்கும், தேசிய கடல் மீன்வள மே லாண்மை ஒழுங்குமுறை வரைவு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, செப்.17 - சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் பெறு வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி அடைந்த வர்கள், சுயமாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்கிட, மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக  அரசு இத்திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர  நிறுவனங்கள் வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.5  லட்சமும், துறையின் உற்பத்தி சார்ந்த தொழி லுக்கு திட்ட மதிப்பீட்டு உச்சவரம்பை ரூ.15  லட்சமும் வங்கிகள் மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது. வங்கிக்கடன் பெறும் தொழில் நிறுவனங்க ளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் வரை  மானியமாகவும் அதிகபட்சமாக இதன்படி ரூ.2.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்ப டும். சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும் புவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விப ரங்கள் அறிய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகம், புதுக்கோட்டை-05 என்ற முக வரியிலோ அல்லது 8925533980 மற்றும் 89255 33981 என்ற எண்களையோ தொடர்பு கொள்ள லாம் என தெரிவித்துள்ளார்.

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

அறந்தாங்கி, செப்.17 - புதுக்கோட்டை மாட் டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் தமிழக அரசு ஆணையின்படி  செப்ட ம்பர் 17 சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இரா.கண்ணன் தலைமையில், அனைத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கோவிலில் மொட்டை அடிக்கும்  தொழிலாளர்களை அரசு  பணியாளராக அறிவிக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.17 - ஸ்ரீரங்கம் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத் தில் வியாழனன்று உலக முடிதிருத்துவோர் தினம் கொண்டா டப்பட்டது. விழாவிற்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை  தாங்கி கொடியேற்றினார். இதில் செயலாளர் ராஜலிங்கம்,  ஆலோசகர் சுரேஷ் ஆகியோர் பேசினர். விழாவில் கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்க ளையும், ஊராட்சி கிராமப்புற தொழிலாளர்களையும் அரசு ஊழியராக பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் முடிதிருத்தும் தொழிலா ளர்களுக்கு இலவச வீடுகள் ஒதுக்க வேண்டும். மானிய விலை யில் மின்சாரம் வழங்க வேண்டும். எம்பிசி உள் ஒதுக்கீட்டை  இரண்டரை சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் மற்றும் பி.சி.ஆர் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், செப்.17 - சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்படுவதால் தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.1,00,000 விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.  2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.  தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2021 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் 31.10.2021 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;