districts

மதுரை முக்கிய செய்திகள்

நீட்தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு, செப். 16- நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயம் காரணமாகத்  தீக்குளித்து தற்கொலை க்கு முயன்றுள்ளார். 40 விழுக்காடு  தீக்காயத்துடன் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் சேத்துப்பட்டு எம்.சி.சி ஆசி ரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிபா இவரும் மாடம்பாக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வரு கின்றனர். இதே பள்ளியில் இவர்களது மகள் அனுசியா 12 ஆம்  வகுப்பு படித்து முடித்துள்ளார்.   இந்த நிலையில் அனுசியா கடந்த 12 ஆம் தேதி ஆவடி  தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளார். முதன் முறையாக  நீட் தேர்வு எழுதிய அனுசியா தோல்வி பயம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற் கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனே அருகில் உள்ள வர்கள் தீக்காயம் அடைந்த அனுசியாவை காப்பாற்றி செங்கல்  பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 40 விழுக்காடு  தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து  ஆறுதல் கூறினார்.

435 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம், செப். 16- காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்  தொடர்பாக நடைபெறும் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்ததாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டமாக நடைபெற வுள்ளது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்  ஆகிய ஒன்றியங்களுக்கு அக்.6 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களுக்கு அக்.9 ஆம் தேதியும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றி யத்தில் 51,127 ஆண் வாக்காளர்கள், 54,705 பெண் வாக்காளர்கள் மற்றும்  12 இதர வாக்காளர்களும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 50,710 ஆண்,  54,831 பெண், 7 இதர வாக்காளர்களும், உத்திரமேரூர்  50,993 ஆண், 53,423  பெண், 7 இதர, ஸ்ரீபெரும்புதூர் 44,387 ஆண் , 48,964 பெண், 11 இதர, குன்றத்தூர் 1,34,049 ஆண், 1,38,464 பெண் , 41 இதர என மாவட்டத்தில்  மொத்தம் 3,31,266 ஆண் வாக்காளர்களும், 3,50,387 பெண் வாக்காளர்க ளும் மற்றும் 78 இதர வாக்காளர்கள் என ஆக மொத்தம் 6,81,731 வாக்காளர்கள் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,281 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இதில் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட  வாக்குச்சாவடிகளில் 347 வாக்குச்சாவடிகளும், மாநகர காவல் எல்லைக்  குட்பட்ட 88 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 435 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பு மற்றும் கண்கா ணிப்பு பணிகளை கண்காணிக்க வட்டாட்சியர் தலைமையில் 15 பறக்கும்  படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில்  பணியமர்த்தப்பட உள்ளனர். வாக்குப் பதிவு பணிக்காக மாவட்டத்தில்  மொத்தம் 10,433 அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதில்  முதற்கட்ட தேர்தலுக்கு 5,659 அரசு ஊழியர்களும், இரண்டாம் கட்ட  தேர்தலுக்கு 4,774 அரசு ஊழியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல்  கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான புகார்களை 044-27237680 என்ற எண்ணை தொடர்பு  கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்  ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் அதிநவீன பயணிகள் நிழற்கூடம் திறப்பு

கிருஷ்ணகிரி, செப்.16- கிருஷ்ணகிரியில் பயணிகளின் வசதிக்காக சூரிய சக்தியில் இயங்கும் மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழற்கூடத்தை அ. செல்லக்குமார் எம்.பி. திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே ரூ.13.50 லட்சம் மதிப்பில் இந்தியாவிலேயே முதன்முதலாக அதிநவீன நிழற்கூடம் திறக்கப் பட்டது. இந்த நிழல் கூடமானது சூரியசக்தியால் இயங்கக் கூடியது. இந்த நிழற்கூடமானது பயணிகளின் தகவலுக்காக டிஸ்பிளே போர்டு, எல்.இ.டி.டிவி வைஃபை போன்ற வசதிகள் கொண்டதாக இருக்கும். மேலும் மழை நீர் வடிகால் வசதியும் உள்ளது. சாலை விரிவாக்கத்தின்போது இந்த நிழற்கூடத்தை இடிக்காமல் அப்படியே வேறு இடத்திற்கு மாற்றி வைக்கும் வசதி கொண்டது. மேலும், எல்இடி டிவி மூலம் விளம்பரங்கள் செய்து சம்பந்தப்பட்ட ஊராட்சி, வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை ஆலை பாக்கியை
விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை

திருவள்ளூர், செப். 16- திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் 2020-21-ம் ஆண்டிற்கான  ரூ.22.69 கோடி  கரும்பு நிலுவை தொகையை விவசாயி களின் வங்கி கணக்கில் வரவு வைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் நடப்பாண்டில் கரும்பு நடவு செய்யும் விவ சாயிகள் அனைவரும் தமிழக அரசு அறி வித்துள்ள சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ்  100 விழுக்காடு மானியத்தில் சிறு மற்றும் குறு  விவசாய பெருமக்களும், 75 விழுக்காடு மானி யத்தில் விவசாயிகள் பதிவு செய்து சொட்டு நீர் பாசனம் அமைத்து கரும்பு நட்டு, அதிக  மகசூல் மற்றும் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டுமாய் மாவட்ட ஆட்சித் தலை வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

;