districts

மதுரை முக்கிய செய்திகள்

ஒன்றரை ஆண்டுகளுக்கு தட்டச்சு தேர்வுகள்

தஞ்சாவூர், செப்.20- தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் மூலமாக நடத்தப்படும், தட்டச்சு தேர்வுகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சனி, ஞாயிறு (செப்.18,19) இரண்டு நாட்களாக  தமிழகமெங்கும் நடைபெற்றது.  கொரோனா ஊரடங் கிற்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்வில் மாணவ,  மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தேர்வுத்துறை கொரோனா தடுப்பு முறை களை முறையாக பின்பற்றி தேர்வினை நடத்தியது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில், கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தனிமனித இடைவெளியுடன் தேர்வு நடைபெற்றது. 

வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

வேலூர், செப்.20- வேலூர் மாவட்டம் காட்பாடி, திருவலம் பகுதிகளில்  இடியுடன் மழை கொட்டியது. குடியாத்தம் பகுதிகளில்  லேசான மழை பெய்தது. வேலூர் மாநகர பகுதியில் இடியு டன் மழை பெய்ததால் தெருக்களில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருவதால் தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கடந்த சில  வாரங்களுக்கு முன்பு பாலாற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கத்தாழம்பட்டு, காவனூர், விரிஞ்சி புரம், செதுவாலை மேல்மொணகூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு  நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஏரிகள் 50 சதவீதத்துக்கும் மேல் நிறைந்துள் ளன. குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை11.5  மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தற்போது  11.2 மீட்டர் தண்ணீர் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாவில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. அங்கு 114.6  மில்லி மீட்டர் மழை பதிவானது. அம்மூர், சோளிங்கர், ஆற்காடு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது  மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது. ராணிப்பேட்டை,  வாலாஜாவில் பலத்த மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் உள்ள கானாறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு, பொன்னையாறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது.நேற்று பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், ஆம்பூர், நாட்டறம் பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய  இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருப்பத்தூர் நகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில்  அதிகபட்சமாக ஆம்பூரில் 56 மில்லி மீட்டர் மழை  பதிவானது.ஏலகிரி மலையில் சாரல் மழை பெய்தது.  இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது.

வீடு இடிந்து மூதாட்டி பலி

திருவண்ணாமலை,செப்.20- திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஆரணி அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த வர் ரேணு என்பவரது மனைவி சின்ன பாப்பா (85). இவரு டைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். 2 மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சின்ன பாப்பா தனியாக அந்தப்பகுதியில் உள்ள கான்கிரீட் வீட்டில் வசித்து வந்தார். இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது சின்ன பாப்பா வீட்டின் மேற்கூரை மற்றும்  பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிக்கொண் டிருந்த சின்ன பாப்பா இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள்-மாணவிகளுக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி,செப்.20- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில்  உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில்  படிக்கும் மாணவிகள் 3 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அளித்து அரசு உத்தவிட்டது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. பள்ளி வகுப்பறைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்விகள் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கொரோனா தொற்றி னால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா சிகிச்சை  மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த பள்ளியில் படித்த மாணவிகள் மற்றும்  ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரது பரிசோதனை முடிவுகள் இன்று  வெளியாகின. அதில் பள்ளி மாணவிகள் 4 பேருக்கும், ஆசிரியர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரும்  கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

தஞ்சை கல்லூரி மாணவர் விடுதியில் ஜன்னல், வாசலுக்கு கதவு இல்லை மாணவர் சங்கம் ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர், செப்.20- தஞ்சையில் டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும் என வலியு றுத்தி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் ஜி.அரவிந்தசாமி தலைமையில், மாண வர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து கோ ரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அந்த மனுவில், “எங்கள் விடுதியில் 160  மாணவர்கள் உள்ளனர். இந்த காலகட்டத் தில் 50 மாணவர்கள் தற்போது தங்கி வருகின்ற னர். மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை. மேலும் மாண வர் விடுதியில் கதவு, ஜன்னல் ஏதுமில்லை. இதனால் மழைக்காலங்களில் பாம்பு, பூச்சி மாணவர் விடுதிக்குள் புகுந்து விடுகிறது. மா ணவர்கள் அச்சத்தோடு இரவு நேரத்தில் உறங்காமல் கண் விழித்து காக்கும் நிலை உள்ளது.  மேலும், சுகாதாரமான குடிநீர் வசதிகூட இல்லாமல் உள்ளது. கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. எனவே, சுகா தாரமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விசிறி, அனைத்தையும் செய்து தர வேண்டும். மேலும், தரமான சுவையான உணவு, ஜன்னல், வாசல் உள்ளிட்ட அனைத்து அறைகளுக்கும் கதவு வசதி செய்து தர வேண்டும். கொசுத்தொல்லை அதி கமாக இருப்பதால், கொசு மருந்துக்கு ஏற்பாடு  செய்ய வேண்டும். எங்களுடைய கோரிக்கை களை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நிறை வேற்றி தர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.


 

;