districts

மதுரை விரைவு செய்திகள்

கலப்பட டீ தூள் பறிமுதல்

தருமபுரி, அக்.17- கடத்தூர் பகுதியில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடத்திய திடீர் ஆய்வில் கலப்பட டீ  தூள் பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், ரேகட அள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி மற்றும்  டீ கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற் பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதை யடுத்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி உத்தர வின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலு வலர் பானு சுஜாதா, மொரப்பூர் ஒன்றிய உணவு  பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் அடங் கிய குழுவினர் ரேகடஅள்ளி, சில்லாரஅள்ளி, கடத்தூர்  ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்த னர். அப்போது, பேக்கரி மற்றும் டீ கடை, மளிகை  கடை, உணவகங்களில் காலாவதியான குளிர்பானம், உரிய லேபிள் பின்பற்றாத குளிர்பானங்கள் உள்ளிட்ட  பொருட்களை கைப்பற்றி அழித்தனர்.  அதேபோல், 4 கடைகளில் கலப்பட டீ தூள் பறிமு தல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை  விடுக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு உரிமம் பின்பற்ற வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், 7 நாட்களில் நிவர்த்தி செய்யவில்லை எனில், சட்டரீதியான நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.

2 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

சேலம், அக்.17- சேலத்தில் கழிவுநீரை வெயியேற்றிய 2 சாயப்பட்ட றைகளின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்த னர். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி, சீலநாயக் கன்பட்டி, கனரம்பட்டி, தாதகாப்பட்டி, காடை யாம்பட்டி, பொம்பியம்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் சில சாயப்பட்டறைகளில், சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீரை வெளியேற்றி வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, களரம்பட்டி, பொம்மியம்பட்டி ஆகிய பகுதிகளில் 2 சாயப்பட்டறைகள் அனுமதி பெறாமல் இயங்கி வந்ததும், சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவுநீரை வெளியேற்றியதும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, 2 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறு கையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமலும், சாயப்பட்டறைகளில் இருந்து கழிவு நீரை சுத்திகரிக்காமலும் வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஆலையை மூட  உத்தரவு அளிக்கப்படும். மேலும், வீட்டு உபயோகம், குடோன் போன்றவை களுக்கு மின் இணைப்பு பெற்று சாயப்பட்டறை நடத்தி னால் அபராதம் விதிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்படும், என்றார்.

விதிமுறைகளை மீறிய 26 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

சேலம், அக்.17- சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட  26 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டது. ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடி களில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள  போக்குவரத்து அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். சேலம் சரகத்தில் மேட்டுப்பாடி, தொப்பூர் சுங்கச்சாவடிகளில் கடந்த 13  ஆம் தேதியன்று முதல் சனியன்று வரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ச்சியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த தொடர் சோதனையில், வாகனங்கள் கண்கூசும் முகப்பு விளக்குகளை பயன்படுத்தியது, அவசர வழி  கதவு செயல்படாதது, காற்று ஒலிப்பான் பயன்படுத்தி யது, சாலை வரை செலுத்தாமல் இயக்கியது, முறை யான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட விதிமு றையை மீறியது தெரிய வந்தது. இவ்வாறு இயக்கிய 26  ஆம்னி பேருந்துகளுக்கும், விதிமுறையை மீறி இயக் கிய 42 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட் டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ஆயுதபூஜையையொட்டி நடந்த சிறப்பு வாகன தணிக்கையில் விதிமுறையை மீறி இயக்கிய 26 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம், வரியாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. 42 வாகனங்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட் டது. மேலும், வரி செலுத்தாமல் இயக்கிய ஒரு ஆம்னி  பேருந்து, மேக்ஸ் கேப் வாகனம் பறிமுதல் செய்யப்பட் டது, என்றனர்.

வேன் கவிழ்ந்து விபத்து: 11 பேர் படுகாயம்

பென்னாகரம், அக்.17- தருமபுரி மாவட்டம், பென் னாகரம் அடுத்த ஒகேனக் கல்லுக்கு, கோவையைச் சேர்ந்த 11 பேர் ஒரு வேனில் சுற்றுலா வந்தனர். சுற்றுலாத் தலங்களை பார்த்துவிட்டு, ஞாயிறன்று சொந்த ஊர் கிளம்பினர். அப்போது, ஒகே னக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீர்  சுத்திகரிப்பு நிலையம் அருகே மலைப்பாதை வளை வில் சென்றபோது, ஓட்டுன ரின் கட்டுப்பாட்டை இழந்த  வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இதில் பயணம் செய்த  அனைவரும் படுகாயமடைந் தனர். படுகாயம் அடைந்தவர் களை மீட்டு, சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர்.

;