districts

img

இந்திய பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க இளைய சமுதாயம் முன்வர வேண்டும்

மதுரை, ஆக.11- மதுரையில் திங்களன்று இந்தியா விற்கான மக்கள் இயக்கம் சார்பில் நடை பெற்ற சுதந்திரதின விழா சிறப்பு நிகழ்  விற்கு 95 வயதான விடுதலைப் போராட்ட வீரர் பூலூர் செட்டியார் வந்தி ருந்தார். அவருடன் சிதம்பர பாரதி யின் பேத்தி ஜெயபாரதி, விடுதலைப் போராட்ட வீரர் நாகம்மாளின் மகள்  ஆர்.ப்ரீத்தி ஆகியோர் கௌரவிக்கப் பட்டனர். மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், இவர்களை கௌர வித்தார். நிகழ்வில் பங்கேற்ற பூலூர் செட்டி யாரிடம் தங்களைப் பற்றி கூற வேண்டு மென நிகழச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்க, விடுதலைக்காகப் போராடினேன். வெள்ளையனை வெளியேற்றப் போரா டினோம் என்று சொன்னால் போதும். “விடுதலை” என்ற சொல்லே உயர்ந் தது என்றார். அன்றைய விடுதலையும் இன் றைய நிலையும் குறித்து பூலூர் செட்டி யார் தீக்கதிருக்காக அளித்த  பேட்டி: நான் பிறந்தது பேரையூர் தாலுகா  டி.இராமநாதபுரம். தற்போது சின்னாள பட்டியில் வசிக்கிறேன். 1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஐ.மாயாண்டிபாரதி, என்.எம்.ஆர்.சுப்புராமன், லெட்சுமணன், ஏ.சி.பெரியசாமி ஆகியோருடன் இணைந்து மதுரையில் நடைபெற்ற போராட்டத் தில் பங்கேற்றேன். காவல்துறை எங்  களை கைது செய்து பெல்லாரி சிறைக்கு அனுப்பியது.  அங்கு சிறைவாசம் அனு பவித்தோம். சுதந்திரத்தால் நாடு சுபிட்சம் பெற்றுள்ளது. விடுதலைப் போராட்ட  நெருப்பு சில அடிமட்ட மக்களிடம் இன்  றும் இருக்கிறது. ஆனால் தேசபக்தர் களின் நோக்கம் நிறைவேறவில்லை. அனைவருக்கும் கல்வி, வேலை கிடைக்க வேண்டும். இந்தியா விவசாயத்தில் தன்னி றைவு பெற வேண்டுமென கனவு கண்  டோம். இன்றைக்கு விளை நிலங்கள் அனைத்தும் கட்டடங்களாக மாறி வரு வது வருத்தமாக உள்ளது. விவசா யத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார். இந்தியாவின் திருக்கோவில்கள் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் வர்ணிக்கப்பட்ட எல்ஐசி, நெய்வேலி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகிறதே எனக் கேட்டதற்கு, பொதுத்துறை நிறு வனங்களை விற்கக் கூடாது. அதைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு இளைய சமுதாயம் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

;