districts

img

மோடி அரசின் மின் திருத்த மசோதா நகலை எரித்து ஆவேச போராட்டம்

மதுரை, ஆக.8-  மக்கள்,விவசாயிகளை பாதிக்  கும் வகையிலும் தனியார் பெரும் நிறுவனங்கள் லாபம் குவிக்கும் வகையிலும் ஒன்றிய மோடி அரசு மின்சார சட்டத்திருத்த மசோதா வை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் மின்ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர், பொதுமக் கள், பல்வேறு அமைப்பினரின் ஆவேச போராட்டம் துவங்கியுள் ளது. தமிழகத்தில் மின் வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில்  மதுரை புறநகரில் மதுரை, திரு மங்கலம், உசிலம்பட்டி, பசுமலை, சமயநல்லூர், மேலூர் உட்பட 30  க்கும் மேற்பட்ட மின் வாரிய பிரிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழி யர் மத்திய அமைப்பின் தலை வர் திருமுருகன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சுரேஷ் குமார்  மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமான பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. காவல் துறையினர் ஏராளமானோர் குவிக்  கப்பட்டு நகல் எரிப்பதை தடுக்க முற்பட்டனர். சட்ட நகலை எரித்த விவசாயிகள் சங்கத்தினர் கைது  செய்யப்பட்டனர். மாவட்ட செய லாளர் மோகன்,  மாவட்ட பொருளா ளர் விசுவம், விவசாயத்தொழிலா ளர் சங்க  மாவட்ட நிர்வாகி தண்டி யப்பன் உள்ளிட்டோர் கைதாகினர்.

தேனி

தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் சார்பில் தேனி மாவட்டம் போடியில் சட்ட நகல் எரிப்பு போராட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் எஸ்.கே. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், மாவட்டக்குழு உறுப் பினர் கே.செல்வராஜ், மாதர் சங்க  மாவட்ட தலைவர் மீனா, செல்லத்  துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பண்ணைபுரத்தில் விவசாயி கள் சங்க தாலுகா செயலாளர் எஸ். சுருளிவேல் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஏரியா செயலாளர் டி.ராஜா ,மாதர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா, உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மற்றும் பர மக்குடி மின்வாரிய கண்காணிப்பு மற்றும் செயல் அலுவலக பொறி யாளர் அலுவலகம் முன்பாக அனைத்து தொழிற்சங்க ஊழி யர்கள் மற்றும் பொறியாளர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இராமநாதபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு )நிர்வாகிகள் முருகன், காசிநாதன்,  ஜெபமணி மற்றும் மின் பொறியாளர்  அமைப்பின் மாநில  நிர்வாகி ஆர் குருவேல் உள்ளிட்  டோர் பங்கேற்றனர். பரமக்குடி யில் மின் ஊழியர் மத்திய அமைப்பு   நிர்வாகி முருகன் மற்றும் சகோதர சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கடலாடி தாலுகா கிழக்கு சிக்கல் பகுதியில் விவசாயிகள் சங்க  மாவட்ட செயலாளர்  மயில்வாக னன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

திருவில்லிபுத்தூர் 

திருவில்லிபுத்தூர் நகர் துணை மின் நிலையம், கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் வலையபட்டி துணை மின் நிலையம். வத்ராயிருப்பு துணை மின் நிலையம் உள்ளிட்ட அலு வலகங்களில் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் உள்ளி ருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றது.

 

;