மதுரை, மார்ச் 22- மதுரை மாநகராட்சி 56 வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளிவீதியார் மேல்நிலைப் பள்ளியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், மத்திய - 1 ஆம் பகு திக்குழு செயலாளர் வை.ஸ்டாலின், செயற் குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. பாண்டி, மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள், 56 வது வார்டு மாநகராட்சி அதிகாரி விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.