districts

img

மாமேதை காரல் மார்க்ஸ் 205 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, மே 6- மாமேதை காரல் மார்க்ஸ் 205-ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதி குழு சார்பில் வெள்ளி யன்று அரியமங்கலத்தில் நடை பெற்றது.  கருத்தரங்கிற்கு காட்டூர் பகுதிக் குழு உறுப்பினர் கனல் கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை, மாநகர் மாவட்டச் செயலாளர்  ராஜா, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் லெனின், ரேணுகா, காட்டூர்  பகுதிச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தஞ்சாவூர்  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம், ரெட்டவயலில்  கருத்தரங்கில் கட்சி உறுப்பினர் களுக்கு கட்சி உறுப்பினர் ரசீது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் தயார் சுல்தான் வரவேற் றார்.

மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன், மூத்த தோழர் வீ.கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூ ரில் நடைபெற்ற பேரவைக்கூட்டத் திற்கு மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனக ராஜ் சிறப்புரையாற்றினார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப. மாரியப்பன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்தி ரன், சி.விஜயகாந்த் ஜி.வெண்ணிலா,  கே.பி.மார்க்ஸ் ஆகியோர் உரை யாற்றினர். முன்னதாக மண்டபத் திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த மாமேதை மார்க்ஸ் படத்திற்கு மலர்  தூவி மரியாதை செலுத்தினர். கரூர் கரூர் மாவட்டக்குழு சார்பில் தாந்தோணிமலையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மாவட்டச் செயலா ளர்  மா.ஜோதிபாசு தலைமை வகித் தார். முன்னாள் மாநிலக் குழு உறுப்பி னர் சு.பொ.அகத்தியலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா ஆகி யோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், பிஎஸ்என்எல் நிறு வனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற பாலசுப்பிரமணியன், கட்சி யின் வளர்ச்சி நிதியாக ரூ.3 ஆயிர மும், அயனாவரத்தில் இயங்கி வரும்  சிஐடியு நிர்மல் பள்ளி நிதியாக ரூ.3  ஆயிரமும் சிபிஎம் மாநிலக் குழு உறுப் பினர் எஸ்.பாலாவிடம் வழங்கினார்.  கூட்டத்தில் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.