districts

img

பெரம்பலூர் மாவட்டத்திற்கு தனி கூட்டு குடிநீர் திட்டம் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

பெரம்பலூர், ஆக.19 - பெரம்பலூர் நகராட்சி மற்றும்  அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில்  மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அமைச்சர் நேரு செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: பெரம்பலூர் நகராட்சி ஆணை யர் பணியிடம் விரைவில் நிரப்பப் படும். பெரம்பலூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கு கூடுதல் வாக னங்கள் வேண்டும் என்றும், போதிய தூய்மைப் பணியாளர்களை நிய மிக்க வேண்டும் என்றும் மாவட்ட  ஆட்சியர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி யில் பணிபுரியும் ஊழியர்கள் போது மான அளவில் இருக்க வேண்டும் என  அரசாணை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் பெரம்பலூர் நகராட்சியில் தேவையான அள விற்கு பணி நியமனம் செய்ய மிக  விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரம்பலூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் மனை வரைமுறை கட்டணம் செலுத்தி அனுமதி பெற கடந்த 10 மாதங்களாக போராடி வரும் நிலையில், டவுன் பிளானிங் அலுவலகம் நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் உரிய பதில்  தர முடியவில்லை. இவை அனைத்திற்கும் ‘எங்கள் கையில் ஒன்றுமில்லை’ என பணி  செய்பவர்கள் கூறி வருகின்றனர். தற்போது முறையாக குடிநீர் வழங்காததால் ஆங்காங்கே  சாலை மறியல் நடைபெற்று வருகிறது. நகராட்சி துப்பரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலியை வழங்குவதில்லை. மேலும் தொழிலாளர்களுக்கு இபிஎப் தொகையை முழுமையாக ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் முகக்  கவசம் மற்றும் கையுறை அணியாமல் பணி செய்து வருகின்றனர். எனவே மேற்கண்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் நகராட்சி தலைவரும் கவனித்து உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குப்பைகளை அள்ளுவதற்கு கூடுதலாக வாகனங்கள் வழங்கப்ப டும். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படை யில், அதற்கும் மிக விரைவில் அனு மதி பெற்று கொடுக்கப்படும்.  காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு களில் 248 இடங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில்  கூட்டுக் குடிநீர் திட்டம் எடுத்து வரு கிறோம். இதில் 78 இடங்கள் மழை  வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில் சேதம் அடைந்துள் ளன. இதை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம். பெரம்பலூர் நகரத்திற்கென தனியாகவே ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு  வர ஏற்பாடு செய்து கொண்டிருக் கிறோம். தமிழ்நாடு முதலமைச்ச ரின் அனுமதி பெற்று பெரம்பலூர் நக ராட்சிக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் விரைவில் தனி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி யர் ப.ஸ்ரீவெங்கட பிரியா, பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபா கரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலை வர் சி.ராஜேந்திரன், நகர்மன்ற தலை வர் அம்பிகா ராஜேந்திரன், நகர்மன்ற  துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர் (பொ)மனோ கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

;