districts

img

புதுச்சேரியில் நவ.8ல் இருந்து பள்ளிகள் திறப்பு – அமைச்சர்  

புதுச்சேரியில் நவ.8 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.  

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். நகர் பகுதிகளில் 9 மணிமுதல் 1 மணி வரையும், கிராமப்புறங்களில் 9:30 முதல் 1 மணி வரையிலும் பள்ளிகள் செயல்படும்.

அதேபோல் மாணவர்களுக்கான வருகை பதிவேடு கிடையாது. அதனால் சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பலாம்.

அதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

;