districts

கொலைக்கு சம்பந்தமில்லாத சிபிஎம் நகரச் செயலாளரை கைது செய்வதா?

மயிலாடுதுறை, ஆக.18-  மயிலாடுதுறையில் புதனன்று இரவு நடந்த கொலையில் சம்  பந்தமே இல்லாத மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்  செயலாளர் தே.துரைக்கண்ணு வை காவல்துறை கைது செய்  துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு கண்டனம் தெரி வித்துள்ளது.  இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: மயிலாடுதுறையில் 2021-ஆம் ஆண்டு கலைஞர் காலனி சார்ந்த தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்  மேனாக பணியாற்றி வந்த தே. கதிரவன் என்பவரை மயிலாடு துறை கொத்ததெருவை சேர்ந்த கண்ணன், ரஞ்சித் மற்றும் சிலர் கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களால் தாக்கினர்.  இதில் தலையில் வெட்டு காயங்  களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், தஞ்சை மீனாட்சி மிஷன்  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று வந்தார். தற்பொழுது மீண்  டும் மின்சார வாரிய பணியை செய்து வருகிறார்.    குற்றவாளிகள் கண்ணன் உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்ட னர். இவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டப்பிரிவுகள் போடப்பட்டது. பிறகு குண்டாஸ் போட்டு சிறை யில் இருந்தனர்.  இந்நிலையில், கடந்த 10 தினங்க ளுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த கண்ணன் (வன்னி யர் சங்க மயிலாடுதுறை நகரச் செய லாளர்) புதனன்று (ஆகஸ்ட்17) இரவு மயிலாடுதுறையில் அடை யாளம் தெரியாத சில நபர்களால் கொடூரமாக கொலை செய்யப் பட்டார்.  

இந்த மனிதாபிமானமற்ற படு கொலையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்  டக் குழு வன்மையாக கண்டிக்கி றது. கொலை குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். மேலும் மயி லாடுதுறை காவல்துறையினர் ஏற்  கனவே நடைபெற்ற கொலை வெறி  தாக்குதலின் பின் தொடர்ச்சியா கவே இந்த கொலை நடைபெற் றுள்ளது என்று சந்தேகித்துள்ளது.  எனவே தே.கதிரவன் மற்றும் அவருடைய சகோதரர்கள் தே. துரைக்கண்ணு, தே.பிரபாகரன் ஆகியோரை கைது செய்துள்ள னர். தே.கதிரவனின் சகோதரர்  தே.துரைக்கண்ணு மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராகவும், மாவட் டக் குழு உறுப்பினராகவும் செயல்  பட்டு வருகிறார்.  இக்கொலை சம்பவத்திற்கும் தே.துரைக்கண்ணுவிற்கும் எவ்  வித சம்பந்தமும் கிடையாது. காவல்துறையினர் மூவரையும்  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தான் கைது செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.  எனவே, காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கைது செய்திட வும், பதற்றம் இல்லாமல் ஒரு அமை தியான சூழ்நிலையை ஏற்படுத்த  வேண்டும் எனவும் படுகொலை யில் எந்தவித தொடர்பும் இல்லாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நக ரச் செயலாளர்  தே.துரைக்கண்ணு மற்றும் சகோதரர்களையும் விடு தலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

;