districts

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் தனித்திறனை கொச்சைப்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவர் மாதர் சங்கம் கண்டனம்

புதுக்கோட்டை, ஆக.17 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் தனித்திறனை கொச் சைப்டுத்தும் ஆணாதிக்கவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் பி.சுசீலா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: பெண்கள் பல துறைகளிலும் அசாத்திய திறமைகளை வெளிப் படுத்தி வருகின்றனர். இருந்தும் பல  துறைகளில் உள்ளே நுழையவிடா மல் பெண்கள் தடுக்கப்பட்டு வரு கின்றனர். என்னதான் திறமையை வெளிப்படுத்தினாலும் ‘பெண் தானே’ என்ற அலட்சியம் சமூகத் தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் ஒரு பகுதி யாகத்தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரையும் கொச்சைப்படுத் தும் போக்கு உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யராக இருப்பவர் கவிதாராமு. பொதுவாக அதிகாரிகள் ஆணா, பெண்ணா என ஜனநாயக மாதர் சங்கம் பாகுபாடு பார்ப்பதில்லை. பெண்கள் மீதும், பெண் குழந் தைகள் மீதும் மிகுந்த அக்கறை யோடு அணுகும் ஆண் அதிகாரி களும் இருக்கத்தான் செய்கின்ற னர். பல பெண் அதிகாரிகளின் செயல் பாடுகள் மீது எங்களுக்கு விமர்ச னமும் உள்ளது. ஆனால், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது வைக்கப் படும் விமர்சனம் வேறு வகையா னது. அவரின் நிர்வாகத் திறமை மீது  யாரும் பெரிய அளவில் விமர்சனம் வைப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் நிர்வாகப்  பொறுப்பேற்று பல ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளால் பாராட்டுக் களைப் பெற்றவராகவே உள்ளார்.  மாதர் சங்கம் வைக்கும் கோரிக்கைகள் மட்டுமல்ல; அடித்தட்டு, விளிம் புநிலை மக்கள்மீது அக்கறை கொண்டதாகவே அவரின் செயல் பாடு உள்ளது.

கவிதாராமு இந்திய ஆட்சிப்  பணிக்கு வருவதற்கு முன்னர் சிறு  வயது முதலே தேர்ந்த நடனக் கலை ஞராக உள்ளவர். பல மேடைகளில் தனது கலைத் திறமையால் பல் வேறு பாராட்டுக்களைப் பெற்றுள் ளார். இந்நிலையில், தற்பொழுது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிய ராக உள்ளார். மாவட்ட ஆட்சிய ராக பொறுப்பில் இருந்தாலும் அவ்வப்போது தனது கலை ஆர்வத் தையும் வெளிப்படுத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியரின் தனித் திற மையை பலரும் பாராட்டி வருகின்ற னர்.  ஆனால், ஒரு சில ஆணாதிக்க வாதிகளால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் ‘நாட்டியக் காரிதானே’ என்ற கிண்டலும், கேலி யும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டு இருக்கிறது. நாட்டியம் என்பது அருவருக்கத்தக்கதாக அவர்கள் மூளைக்குள் திணிக்கப் பட்டுள்ளது. அதனொரு பகுதியாகத் தான் கடந்த சுதந்திரத் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் ஒன்றில் ஆட்சியரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் கொச் சைப்படுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட திரு வரங்குளம் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்டது கைக்குறிச்சி ஊராட்சி. இவ்வூராட்சியின் முன் னாள் தலைவர் சுப.செல்வராஜ். தற்பொழுது இவரின் துணைவி யார் ரெங்கநாயகி தலைவராக உள்ளார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த இவர்தான் மனைவிக்குப் பதிலாக ஊராட்சி மன்றத் தலைவ ராக செயல்பட்டு வருகிறார். அவர்  சார்ந்த கட்சியின் முதல்வர், உள் ளாட்சி மன்றங்களில் பெண்களை சுதந்திரமாக செயல்பட வேண்டு மென மாநாடே நடத்தியுள்ளார்.  ஆனால், இவர் அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படவில்லை.

கடந்த ஆக.15 அன்று கைக் குறிச்சி ஊராட்சி சார்பில் நடை பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மனைவியை ஓரத்தில் உட்கார வைத்துவிட்டு, இவர்தான் கூட்டத்தை நடத்தியுள்ளார். கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை. பொதுமக்கள் வருவதற்கு முன்பே தீர்மானங்களை நிறைவேற்றி, கூட்டத்தை முடிக்க தீவிரம் காட்டி யுள்ளார்.  இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவ்வூரைச் சேர்ந்த மாதர்  சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தி னர் இதுகுறித்து கேள்வி எழுப்பி யுள்ளனர். அதற்கு அவர், ‘நான் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவன்; அப்படித்தான் நடந்து கொள்வேன்; உங்களால் முடிந்தததை பார்த்துக்  கொள்ளுங்கள்” எனத் கடுமை யாகப் பேசியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சிய ரின் கவனத்திற்கு கொண்டு போ வோம் என்ற போது “கலெட்ட ருக்கு டான்ஸ் ஆடவே நேரம் போதாது. உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என  மரியாதைக் குறைவாகப் பேசி யுள்ளார்.  மேற்படி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் செயல் மிகவும்  கண்டிக்கத்தக்கது. சிறப்பாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சி யரின் தனித்திறமை குறித்து கொச்சைப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடி யாது. எனவே, தமிழக அரசு  மேற்கண்ட நபர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.  இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;