districts

குடியிருப்புக்குள் புகும் வனவிலங்குகள்

நீலகிரி, ஜூலை 31- கூடலூர் பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகள் குடியி ருப்பு பகுதிகளில் நுழைந்துவிடுவதால், பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர். கூடலூரில் அதிக வாழை, பாக்கு உள்ளிட்டவை பயிரி டப்பட்டிருப்பதால், வனப்பகுதியில் இருந்து சில்க்காட்டி, மீனாட்சி, பாடந்தொரை, 3வது டிவிஷன் உள்ளிட்ட பகுதிக ளுக்கு காட்டு யானைகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். தற்போது கொரோனா காலம் என்ப தால் மாலை 8 மணிக்கு மேல் வாகனங்கள் இயங்காமலும், மக் கள் நடமாட்டம் குறைவாக உள்ளதாலும் வனவிலங்குகள் வனப் பகுதியில் இருந்து சாலை பகுதிக்கு வருகின்றன. இந்நிலை யில் அப்பகுதிகளில் அதிகமாக மலைவாழ் மக்களும், விவசா யிகளும் வாழ்கின்றனர். இந்நிலையில் 8 மணிக்கு மேல் போக்குவரத்து இல்லாததால் மக்கள் அப்பகுதிகளுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

இதனால் வனவிலங்குகளான புலி, சிறுத்தை, கரடி, காட்டு யானைகள் பொது மக்களை தாக்கி உயிர்சேதத்தை ஏற்படுத்துகின்றன.  இதனால் குடியிருப்பு பகு திக்குள் நுழையும் காட்டுயானைகளை விரட்ட வேண்டும் என கூடலூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;