districts

img

விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானை

நீலகிரி, ஆக.1- கூடலூரை அடுத்த எச்சம்வயல் கிரா மத்தில் விநாயகன் என்ற காட்டுயானை விவசாய பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால், அப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள் ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத் துள்ள தொரப்பள்ளி, குனில்வயல், எச்சம்வயல், வடவயல் கிராமங்களுக் குள் எல்லையில் உள்ள முதுமலை வனப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வரும் விநாயகன் என்ற காட்டுயானை விவசா யிகளின் தென்னை, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்துவ தோடு, வீடுகளையும் சேதப்படுத்தி வரு கிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் இரவு நேரத்தில் வரும் இந்த யானையால் விவசாயிகள் அச்சத் தில் உள்ளனர். யானையை விரட்டும் பணியில் இரவு நேரத்தில் வனத்துறை யினர் ஈடுபட்டாலும், தினமும் யானை ஊருக்குள் வந்து செல்வதை கட்டுப்ப டுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்த யானை கடந்த வருடம் இப்பகுதியில் சுமார் 5க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளதாக அப் பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், தடாகம் சுற்றுவட் டாரப் பகுதிகளில் விவசாய நிலங் களை சேதப்படுத்திய இந்த யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட்டனர். இந்த யானை தற்போது முதும லையை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து மீண்டும் வீடுகளை உடைப்ப தும், விவசாய நிலங்களை சேதப்படுத்து வதுமாக உள்ளது. எனவே, இந்த யானையை வனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும். மேலும், எல்லை யிலுள்ள அகழியை சுற்றி மின்வேலி  அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

;