districts

img

நீலகிரிக்கு இ-பதிவு முறையை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

உதகை, ஜூன் 20- நீலகிரிக்கு இ-பதிவு முறையை ரத்து செய்து இ-பாஸ் மட்டும் நடை முறைப்படுத்த வேண்டும் என  மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். நீலகிரி மாவட்டத்திற்கு சம வெளி பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இ-பாஸ் மற்றும் இ-பதிவு குழப்பத்தால் தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாவட்டத் திற்குள் அனுமதிக்காமல் எல்லை  பகுதியில் திருப்பி அனுப்பப்படு வதால் அவசர தேவைக்கு வரு பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளா கியுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் கொரானா தொற்று பரவுவதை தடுக்கும் முயற்சியில் மாவட்ட நிர் வாகம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட உடனேயே முன்னெச்சரிக்கையாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டு அனைத்து கோடை விழாக்களும் ரத்து செய்யப்பட்டது. அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டது.

இருப் பினும் சுற்றுலாப் பயணிகளின் வரவு கணிசமாக இருந்தது.  இந் நிலையில் உள்ளூர் மக்கள் இ-பதிவு செய்து தாங்கள் அவசர தேவைக்கு  சென்று வர மாவட்ட நிர்வாகம் அனு மதி அளித்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை  பரவத்தொடங்கியதும் மாவட்டத் தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று அதிகமாக பரவிய 11 மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் உள்ள நிலை யில், இதை கருத்தில் கொண்டு  மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்டத்திற்குள் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்தது. வெளிமாவட் டத்தில் இருந்து மாவட்டத்திற்குள் வர தடைவிதித்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் ஜெ.இன்னசென்ட் திவ்யா  தமிழக முதல்வரிடம்  நீலகிரி மாவட் டத்திற்குள் வருபவர்களுக்கு இ-பதிவுக்கு பதிலாக இ-பாஸ் நடை முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் பேரில் இ-பாஸ் பெற்று வந்தால் மட்டுமே இனி மாவட்டத்திற்குள் அனுமதிக் கப்படுவார்கள் என அறிவிக்கப்பட் டது.

இதனால் இ-பாஸ் என நினைத்து இ-பதிவை பதிவு செய்து கோவை, சேலம், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு வரும் பொதுமக்கள் நீலகிரி எல்லை பகுதியான பர் லியார் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப் படுவதால் சமவெளி பகுதி பொது மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சோதனைச் சாவடி யில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கூறு கையில், வெகு தூரத்தில் இருந்து  நீலகிரிக்கு வருபவர்கள் இ-பதிவு செய்து வருகின்றனர் பாதி மலைப்ப குதியில் இருந்து அவர்களை திரும்ப அனுப்புவது வருத்தமாக உள்ளது. இதற்கு ஒரே வழி இ-பதிவு முறையை ரத்து செய்து இ-பாஸ் மட்டும் நடைமுறையில் இருந் தால் இந்த குழப்பம் வராது. இதனை மாவட்ட நிர்வாகம் இதை கவனத் தில் கொள்ள வேண்டும் என தெரி வித்தனர். தற்போது மாவட்டத்தில் 500க்கு மேலாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துள் ளது குறிப்பிடத்தக்கது.

;