districts

img

வெலிங்டனில் பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமானம்

நீலகிரி, ஜூலை 31- குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமின் பயிற்சி நிறைவு செய்த 85 இளம் ராணுவ வீரர்கள் வெள்ளியன்று சத்தியப்பிரமானம் செய்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு, ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்படுத்ம. கடின பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களில் 85 பேர், ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்தியப்பிராமண நிகழ்ச்சி சனி யன்று நடைபெற்றது. மேலும், ராணுவ வீரர்க ளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய துணை  தலைவர் கர்னல் குமாரதாஸ் சிறந்த வீரர்க ளுக்கு பதக்கங்கள்மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

;