districts

பந்தலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழுநேர செவிலியரை நியமிக்க கோரிக்கை

உதகை, ஜன.13- பந்தலூர் அருகே இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழுநேர செவிலியரை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா பாட்டவயல், வெள்ளரி, கொட்டாடு, பந்தக் காப்பு, கல்பரா, செம்ப கப்பாளி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இதில், கொட்டாடு பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார மையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர செவிலியர் இல்லாததால் வாரத்தில் சில  நாட்கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் இப்பகு தியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தை கள் மற்றும் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே இந்த சுகாதார மையத்தில் முழுநேர செவிலியரை நியமித்து அனைத்து நாட்களிலும் நோயாளிகளுக்கு  சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

;