districts

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ஜெனரேட்டர் பொருத்த திட்டம்

 நீலகிரி, மே 18-

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ஜெனரேட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம், பரிசோதனை, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க 3 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர்.

கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தினமும் தொற்று உறுதியாகும் நோயாளிகளை தொடர்பு கொண்டு ஆம்பு லன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வருவது, தொடர் பில் இருந்தவர்களிடம் பரிசோதனை மேற்கொள்வது, ஆக்சிஜன் வினியோகம் போன்றவற்றை கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உதகை அரசு மருத்து வமனையில் 110 ஆக்சிஜன் படுக்கைகளில் 106 பேர் அனு மதிக்கப்பட்டு உள்ளனர். ஐசியூ வார்டில் 20 படுக்கைகளும் நிரம்பியிருக்கின்றன.

மொத்தம் 160 படுக்கைகளில் 151 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கூறுகையில், உதகை அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் பொருத்தப் பட்டுள்ளது. மழை பெய்ததால் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தாமதமாகியது. குழாய்கள் பொருத்தப்பட்டது. அனு மதி கிடைத்தவுடன் பயன்பாட்டிற்கு வந்து விடும. மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ஜெனரேட்டர் பொருத்த திட்டமிடப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 96 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். கொரோனா காலம் மட்டுமல்லாமல் மற்ற சிகிச்சைகளுக் காக பயன்படும்.

ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர் கள் அச்சத்தில், ஆக்சிஜன் குறைவாக தேவைப்பட்டாலும் அதி கமாக பயன்படுத்துகின்றனர். இதனால் விரையமாக வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவர்கள், செவிலியர்கள் அறிவுரைப் படி ஆக்சிஜன் பயன்படுத்த வேண்டும். தேவையான அளவு ஆக்சிஜன் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என கூறினார்.

;