districts

img

ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கம் மனு

 நீலகிரி, ஜூன் 24- உதகை நகராட்சியில் ஒப்பந்த முறை யில் பணிபுரியும் தூய்மை பணியாளர்க ளுக்கு, தாமதமில்லாமல் ஊதியம் வழங் கும் வேண்டுமென நகராட்சி மற்றும் உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கம் ஆட்சி யரிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் நீலகிரி மாவட்ட  ஆட்சியருக்கு அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, உதகை நகராட்சியில் தூய்மை பணியில் ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 170 பேர் பணிபுரிகின்றனர். தற் போது அந்த ஊழியர்கள் உதகை நகராட் சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலை யில், அவர்களுக்கு கடந்த மே மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. ஒப்பந்த தாரரிடம் கேட்கையில் நகராட்சி நிர்வா கம் ஒப்பந்த தொகையை வழங்க வில்லை. எனவே ஒப்பந்த தொகை வந்த பின்பு ஊதியம் வழங்கப்படும் என கூறு கிறார்.

இந்த மாதம் முடிந்தவுடன் இரண்டு மாத ஊதியம் வழங்க வேண் டும். இரண்டு மாதமாக ஊதியம் இல்லா மல் ஒப்பந்த ஊழியர்கள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், முன்கள பணியாளர்க ளாக பணிபுரியும்  நகராட்சி ஒப்பந்த  ஊழியர்களுக்கு  ஊதியம் வழங்காமல் வேலையை வாங்குவது ஏற்க முடியா தது. மேலும், முன்கள பணியாளர்க ளுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை யும் ஒப்பந்ததாரர் வழங்குவதாக தெரிய வில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனடியாக மே  மாதம் ஊதியத்தை அடுத்த மாதம்  குறித்த தேதிக்குள் வழங்க நடவடிக்கை  எடுத்து ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க ஆவண செய்ய  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

;