districts

img

குன்னூர் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு

நீலகிரி, ஏப்.18-

குன்னூரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றா தவர்களுக்கு வருவாய் துறை யினர் அபராதம் விதித்தனர். கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தி யாவில் வேகமாக பரவி வரு கிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், அடிக் கடி சோப்பு போட்டு கைகழு வுவதையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். கொரோனா வரு வதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்பு ணர்வு பிரசுரங்கள் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றன. இருந்தபோதிலும் பொது மக்கள் இதன் மீது அலட்சி யம் காட்டி முகக்கவசம் இல்லாமல் சுற்றி திரிகின்ற னர். இந்த நிலையில் குன்னூ ரில் செயல்பட்டு வரும் சுற் றுலா தலங்களின் அருகே யுள்ள உணவு விடுதிகள், தேநீர் கடைகள், பழக் கடைகளில் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடை வெளியை பின்பற்றாத சுற்றுலா பயணிகள் மற்றும் கடையின் உரிமையாளர்க ளுக்கு வருவாய் துறை அதி காரிகள் அதிரடியாக அப ராதம் விதித்தனர். மேலும், இனி வரும் காலங்களில் அரசு வழிமுறை களை பின்பற்றாமல் இருந் தால் கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், வட்டாச்சியர் சீனி வாசன், உதவி வட்டாச்சியர் முனீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் துரைசாமி, சுரேஷ் ஆகியோர் தனி குழுக்கள் பிரித்து, முகக்கவ சம் அணியாத நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

;