districts

img

குன்னூர் கோத்தகிரி சாலையில் சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி, மே 5- குன்னூர்-கோத்தகிரி சாலையில் வனப்பகுதியை ஒட்டி யுள்ள பகுதிகளில்  சிறுத்தை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி, மாவட்டம், குன்னூர்-கோத்தகிரி சாலையில்  வண்டிசோலை அருகே வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரு வது வழக்கம். தற்போது, சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுவ தால், இந்த சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதி கரிக்க துவங்கிள்ளது.

இந்நிலையில், குன்னூர்-வண்டி சோலை செல்லும் சாலையோரத்தில் சிறுத்தை செவ்வாயன்று அமர்ந்திருந்ததை அந்த வழியாக வாகனத்தில் சென்ற சிலர் புகைப்படம் எடுத்தனர். சாலையில் சிறிது நேரம் அமர்ந் திருந்த சிறுத்தை திடீரென வேகமாக சாலையைக் கடந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இந்நிலையில், சிறுத்தையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதற்குள் வனத்துறையினர், சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அழு பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

;