districts

img

நீலகிரியில் சுமார் ரூ10 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கம் பெரும் நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை

நீலகிரி, மே 12- நீலகிரியில் கொரோனா ஊர டங்கு காரணத்தினால், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கத்தினால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் வரும் மே 24 ஆம் தேதி வரை தமிழகத் தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அத்தியாவசிய தேவைக ளுக்காக மட்டும் மதியம் 12 மணி வரை காய்கறி கடைகள் திறக்கப் படும். பால் விநியோகம் மற்றும் மருந்தகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட் டைக்கோஸ், ப்ரோக்கோலி,  பூண்டு, பீன்ஸ் உள்ளிட்டவைகளின் விலை குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் அமலில்  உள்ளதால் மலை காய்கறிகளை கேரளா, சென்னை, ஈரோடு, கோவை போன்ற சமவெளிப் பகு திகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு மார்க் கெட்டில் சில்லரை வியாபாரங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், நீல கிரி மலை காய்கறிகளுக்கான வியா பாரம் பெரிதும் சரிந்ததுள்ளது. சம வெளிப் பகுதிகள் போலவே மலைப் பிரதேசமாக இருக்கும் நீலகிரி மாவட்டத்திலும் 12 மணி வரை மட் டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப் பட்டு உள்ளதால் பெரும் சிரமம் ஏற் பட்டுள்ளது. குளிர் பிரதேசம் என்பதால் காலை 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் எடுத்து வைக்கவே நேரம் ஆகி விடுகி றது. அதன்பின் 12 மணிக்கு கடைகள் மூடப்படுகிறது. இதனால் வியாபா ரம் செய்ய முடியாமல் வியாபாரி களும் பாதிக்கப்படுகின்றனர்.

நாளொன்றுக்கு சமவெளிப் பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த பட்சம் 20 டன் மலைக் காய்கறிகள் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும். ஆனால், தற்போது கொரோனா அச்சத்தின் காரணமாக இறக்குமதி செய்ய முடி யாமல் காய்கறிகள் மண்டிகளிலும், விவசாய நிலங்களிலும் தேக்கம் அடைகின்றன. மேலும், நீலகிரி சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து காய்கறிகளை நகர் பகு திக்கு கொண்டு வந்து இறக்கி விட்டு மீண்டும் கிராம பகுதிக்கு திரும்பும் போது 12 மணியை தாண்டி விடு வதால் வாகன ஓட்டுநர்களும், விவ சாயிகளும் போலீசாருக்கு அச்சப் படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் பெரும்பாலான கிராமப்புறங் களிலிருந்து நகர் பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு காய்கறிகள் குறை வாகவே வருகிறது. இதனால் 50 சதவிகிதம் மட்டுமே வியாபாரம் நடைபெறுகிறது.

இந்நிலையில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய் யப்பட்ட கேரட் விலை, தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய் யப்படுகிறது. மேலும், உருளைக் கிழங்கு ரூ.25 முதல் ரூ.35 வரை யும், முட்டைகோஸ் கிலோ ரூ.10க் கும், ப்ரோக்கோலி கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரையும், மலைப் பூண்டு ரூ.60 முதல் ரூ.70 வரையும், பீன்ஸ் ரூ.20 முதல் ரூ.50 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இத னால், உற்பத்தி செய்யப்படும் விலையை விட குறைவான விலைக்கே மார்க்கெட்டில் விற் பனை ஆவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், நீண்ட தூரத்தில் இருந்து வந்து நகர் பகுதியில் உள்ள மார்க் கெட்டில் விற்பனை செய்தாலும் அதனை வாங்குவதற்கு பொது மக்கள் வருகை குறைவாகவே உள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முதலீடு போடும் பணம் கூட கிடைப்ப தில்லை.

சில விவசாயிகள் விவ சாய நிலங்களில் இருந்து அறுவடை செய்வதையும் நிறுத்தி வைப்ப தால் காய்கறிகள் விவசாய நிலங்க ளிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு துவங்கி 3வது நாளாக மலை காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நஷ்டம் தொடர்வதால் விவசாய நிலங்க ளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பி லான காய்கறிகள் தேக்கமடைந் துள்ளன. இதனை கருத்தில்கொண்டு மலை மாவட்டங்களில் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரி கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;