districts

மின்சார திருத்த சட்டம் 2020 ஐ கைவிடுக மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

உதகை, ஜன.23 - மின்சார திருத்த சட்டம் 2020 ஐ கைவிட வேண்டுமென மத்திய அரசிற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தி யுள்ளது. சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் குன்னூர் கோட்ட பேரவை கூட்டம் சனியன்று குன்னூரில் நடை பெற்றது.

இந்த கூட்டத்திற்கு சி.மணிகண்டன் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்  தலைவர் கோபாலகிருஷ்ணன் சங்கக் கொடியை  ஏற்றி வைத்தார். மண்டல செயலாளர் மதுசூதனன் சிறப்புரை யாற்றினார்.

சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ்  வாழ்த்துரை வழங்கினார். இப்பேரவையில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இதில் தலைவராக அப்துல் ரஹ்மான்,செயலாளராக அபுபக்கர், துணைத்தலைவராக ஸ்ரீனிவாசன், துணைச்செயலாளராக மணிகண்டன் உள் ளிட்ட 8 பேர் கொண்ட புதிய கோட்டக்குழு தேர்ந்தெடுக் கப்பட்டது.  மேலும், இக்கூட்டத்தில் விவசாய சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

மின்சார திருத்த சட்டம் 2020 ஐ கைவிட வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;