districts

img

நீலகிரி கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1199 வழக்குகள் பதிவு

நீலகிரி, மே 18-

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா ஊர டங்கை மீறியதாக 1199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரு கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமி ழக அரசு பல்வேறு முயற்சிகள் மேற் கொண்டு வரும் நிலையில், காலை 6 மணி யில் இருந்து 10 மணி வரை மட்டுமே அத்தி யாவசிய பொருள்கள் கடைகள் திறக்க அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் கடைவீதிக ளில் பொருட்கள் வாங்கி செல்ல அனுமதிக் கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு காலங்க ளில் தேவையின்றி சுற்றி திரியும் நபர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து சமீபகாலமாக கொரோனா வேகமாக பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், மருத்துவத் துறையின ரும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், காவல்துறையினர் கடும் சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

இந் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று வாகனங்களில் தேவையின்றி சுற்றி வரும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய் யப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், கர்நாடகா, கேரளா ஆகிய எல்லைகளில் அமைந்துள்ள கூடலூர் பகுதி வழியாக உதகைக்கு தலைக்குந்தா வழியாக வாகனங்கள் வருகின்றன. எனவே, இந்த 3  எல்லைகளில் இருந்து வாகனங்களில் வரு வோரை சோதனை செய்து, முறையான ஆவ ணங்கள் உள்ளதா என பரிசோதனை செய்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி புதுமந்து காவல் ஆய் வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தலை குந்தா பகுதியில் வாகனங்கள் தீவிர சோத னைக்கு பின்பு நீலகிரிக்குள் அனுமதிக்கப்படு கின்றன. இதுவரை நீலகிரி மாவட்டம் முழுவ தும் முகக்கவசம் அணியாத நபர்கள் 680 பேர் மீதும், தனி இடைவெளியை கடைபிடிக் காத 79 பேர் மீதும், தேவையின்றி சுற்றித்தி ரிந்த 440 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.  

ஆக மொத்தம் கொரோனா வழி முறைகள் மற்றும் ஊரடங்கு மீறியதாக 1199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் பாண்டியராஜன் எச்சரித்துள்ளார்.

;