districts

மூத்த குடிமக்கள் உதவிபெற 14567 என்ற எண்ணில் அழைக்கலாம்

நாமக்கல், ஜூலை 27- மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா உதவி எண் அறி முகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முதி யோர்களின் அனைத்து குறைகளைத் தெரிவிப்பதற்குத் தமி ழக அரசு ஒன்றிய அரசுடன் இணைந்து உதவி எண்களை அறி வித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு சட்டரீதியான பாது காப்பை உறுதி செய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த  குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007 செயல்படுத்தப் பட்டு, அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய சமூகநீதி அமைச்சகம் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டணமில்லா அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளது.

 முதியோர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு தமிழ்நாட்டில்  2021 ஏப்ரல் 28 ஆம் தேதி முதல், கட்டணமில்லா உதவி எண்:14567 வசதி தொடங்கப் பட்டுள்ளது. இதில், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு மையம், பராமரிப்பாளர்கள், மருத்துவ ஆலோசனை வழங் கும் இடங்கள், வலிநிவாரணி மையங்கள் குறித்து முதியோர்க ளுக்குத் தேவைப்படும் தகவல்கள். அரசுத்திட்டங்களைப் பெறும் வழிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்கள், பராமரிப்பு சட்டம் குறித்த  வழிகாட்டுதல்கள், மனதளவில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு உள்ளிட்ட சேவைகளுக்கு, உதவி மையம் அனைத்து  நாட்களிலும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை செயல்படும்.

எனவே, மூத்த  குடிமக்கள் தங்களுக்கு நேரிடும் பிரச்சனைகள் மற்றும் குறை களைத் தெரிவித்து உதவிகள் பெற 14567 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள் ளது.

;