districts

img

திருமணிமுத்தாற்றின் வாய்க்காலில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

நாமக்கல், ஏப்.18-

எலச்சிபாளையத்தில் பாயும் திருமணிமுத்தாற்றின் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு  அருகே உள்ள எலச்சிபாளை யம் கொண்ணையார் ஆத்துமேடு என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்று உள்ளது. திருமணிமுத்தாறு ஆற்றில் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது திருமணி முத்தாறு வாய்க்காலில் வழியாக மழை நீர் சென்று வரும்.

இந்நிலை யில், மல்லசமுத்திரம் சின்னஏரி, பெரியஏரி, மதியம்பட்டி, கோட்ட பாளையம், கொளங்கொண்ட, பருத்திப்பள்ளி வழியாக புள்ளா கவுண்டம்பட்டி, லத்துவாடி வரை செல்லும் திருமணிமுத்தாறு வாய்க் காலில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இம்மரங்கள் சுமார் 20 அடி உயரத்திற்கு கரைகளின் இருபுறமும் வளர்ந்து அகற்றப்படா மல் புதர்மண்டி கிடப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது.  எனவே, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள இப்பகுதியில் வளர்ந் துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மேலும், இப்பகுதி விவசாயிகளின் நீராதாரத்தை பாது காக்கும் வகையில், மரங்களை வேரோடு பிடிங்கி இரு கரைகளை உயர்த்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

;