districts

பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் பயில்வதை ஆசிரியர்கள் உறுதி செய்திடுக

, ஜூன் 24- கொல்லிமலை பகுதியில் உள்ள  பள்ளி, மாணவ, மாணவியர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங் கள் பயில்வதை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்து உள்ளார். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை ஊராட்சி ஒன்றியம், நெடுஞ் சாலைத்துறை பயணியர் மாளிகை யில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட் சியர் ஸ்ரேயா பி சிங்  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், வட்டார மருத் துவ அலுவலரிடம் கொல்லிமலை பகுதியில் கொரோனா நோய்த் தொற்றின் தன்மை குறித்தும், வீடு வீடாக சென்று பொதுமக்களின் ஆக் சிஜன் அளவு, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யும் பணிகள் குறித்தும், குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறதா? என்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் அறுவை சிகிச்சைகள் குறித்தும் பொதுமக்க ளின் சுகாதார விழிப்புணர்வு நிலைக் குறித்தும் கேட்டறிந்தார்.   மாவட்ட ஆட்சியர் கொல்லி மலை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கல்வி பயில உள்ள பள்ளிகளின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதற்கு அலுவலர் கள் தெரிவிக்கையில், கொல்லி மலை பகுதியில் 47 தொடக்கப்பள்ளி களில் 2069 மாணவ, மாணவியர்க ளும் 16 நடுப்பள்ளிகள் மூலமாக 1,908 மாணவ, மாணவியர்களும் 4  உயர்நிலைப்பள்ளிகள் மூலமாக 375 மாணவ, மாணவியர்களும் 5 மேல் நிலைப்பள்ளிகளின் மூலமாக 2,030 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 72 அரசுப்பள்ளிகளின் மூலமாக 6,382 மாணவ, மாணவியர் கள் பயின்று வருகின்றார்கள். மேலும், 3 தனியார் பள்ளிகள் மூல மாக 464 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றார்கள் என்று தெரிவித்தார்கள். பழங்குடியினர் நல அலவலர் தெரிவிக்கையில், கொல்லிமலை பகுதி பள்ளிகளில்  பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பள்ளிக் காட்டுப்பட்டி செங்கரை மலையா ளப்பட்டி என 3 தொடக்கப்பள்ளிகள் மூலமாக 205 மாணவ, மாணவியர் கள் பயின்று வருகின்றார்கள்.

மேலும், வாழவந்திநாடு செங்கரை, முள்ளுக்குறிச்சி ஆண்கள், முள் ளுக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 4 மேல்நிலைப்பள்ளிகள் வாயிலாக 1,473 மாணவ, மாணவி யர்களும் பயின்று வருகின்றார்கள். செங்கரையில் பழங்குடியின மாண வர்களுக்கான சிபிஎஸ்சி பாடத்திட் டத்தின் கீழ் ஏகலைவா உண்டு உறை விட பள்ளியில் 342 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள் என்று தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கல்வி தொலைக்காட்சியின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாடங்கள் கற்பிப்பதை தொடங்கி வைத்துள்ளார்கள். மேலும் பிற தனியார் தொலைக்காட்சிகளிலும் இந்த பாடங்கள் தொடர்ந்து ஒளி பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லிமலை பகுதி மாணவ, மாண வியர்கள் அனைவரும் தமிழ்நாடு  அரசின் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பாடங்கள் பயில் வதை ஆசிரியர்கள், அரசு அலுவ லர்கள், பழங்குடியினர் நலத்துறை யினர் உறுதி செய்திட வேண்டும்.

அதற்காக கல்வி தொலைக்காட்சி யில் வகுப்புகள் வாரியாக பாடங் கள் தொலைக்காட்சிகளில் ஒளிப் பரப்பு நேரம் குறித்த விவரங்களை மாணவ, மாணவியர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தினார். மேலும், கொல்லி மலை பகுதியில் பொதுமக்களின் இருப்பிட பகுதிக்கே சென்று அப் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூட கட்டடம், அரசு கட்டடங்களில் தடுப் பூசி போடும் பணிகளை மேற் கொள்ள வட்டார மருத்துவ அலுவ லர் உள்ளிட்ட அரசு அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.

 இந்த ஆய்வின் போது நாமக் கல் வருவாய் கோட்டாட்சியர் மு. கோட்டைக்குமார், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அ.மாதேஸ்வரி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ப.இராமசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலவலர் திரு.சி.சீனிவாசன், கொல்லிமலை வட் டார மருத்துவ அலுவலர் மரு.புஷ்ப ராஜ், கொல்லிமலை வட்டாட்சியர் ராஜ்குமார், கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க.நடரா ஜன், க.ரவிச்சந்திரன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண் டனர்.

;