districts

img

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து விசைத்தறி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 19- நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல்,  டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப் பகுதி யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விசைத் தறித் தொழிலாளர்களுக்குக் கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரி ழந்தவர்களை முறையாகப் பதிவு செய்ய  வேண்டும். மகளிர் சுய உதவி குழு, மைக்ரோ பைனான்ஸ், கந்து வட்டியாளர்களிடம் தொழிலாளர்கள் வாங்கிய கடனைத் திருப் பிச் செலுத்த 6 மாதக் காலம் அவகாசம் வழங்கி, வட்டியையும் தள்ளுபடி செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். பள்ளி பாளையம் பகுதியில் அம்மா உணவகத்தை அதிகப்படுத்த வேண்டும். இயற்கை மரணத்திற்கு இறப்பு சான்று பெற அரசு மருத்துவர் சான்று இலவசமாக வழங்க வேண்டும். விசைத்தறி உள்ளிட்ட முறை சாராத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7  ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய அரசு தமிழகத் திற்குக் கூடுதலாகத் தடுப்பூசிகளை வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தி னர் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துக்குமார் தலைமை வகித்தார். இதில், சங்க மாவட்டச் செயலாளர் எம்.அசோகன், ஒன்றியத் தலைவர் அசன், ஒன்றியச் செயலா ளர் அங்கமுத்து, மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி, ஒன்றியக்குழு உறுப்பி னர் கே.குமார் உள்ளிட்ட தொழிற்சங்க நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;