districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டு நிதியளிப்பு பேரவை

நாகப்பட்டினம், ஆக.9 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் நடைபெறுவதையொட்டி நிதியளிப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில்  சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் செப்டம்பர் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான நிதியளிப்பு பேரவை கூட்டம் கீழ்வேளூரில் நடை பெற்றது. மாநாட்டு வரவேற்புக் குழுத் தலை வரும், கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பின ருமான வி.பி.நாகைமாலி தலைமை வகித் தார். கூட்டத்தில் ரூ.13,23,000 முதற்கட்ட நிதியை அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் துணைத் தலைவரும், சிபிஎம் மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டு உரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்  தலைவர் வீ.சுப்பிரமணியன், விச நாகை  மாவட்டச் செயலாளர் கோவை.சுப்ரமணி யன், விதொச மாவட்டச் செயலாளர் எம்.முரு கையன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர்  ப. சுபாஷ் சந்திரபோஸ், மாதர் சங்க மாவட்டச்  செயலாளர் டி.லதா, சிபிஎம் வடக்கு ஒன்றியச்  செயலாளர் என்.எம்.அபுபக்கர், தெற்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.முத்தையன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

;