districts

img

முதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்

திருப்பூர், ஜூலை 29- திருப்பூரில் முதுபெரும் தோழர்.கு.சி.முத்துசாமி காலமானார். திருப்பூரில் சிஐடியு பாத்திரத்  தொழிலாளர் சங்கத்தின் ஆரம்ப கால நிர்வாகிகளில் ஒருவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தீவிர ஆதரவாளருமான முருங்கப் பாளையம் பட்டறைக்காரர் எனப்படும் கு.சி.முத்துசாமி (96) வியாழனன்று காலமானார். சிறிது காலம் உடல் நலக் குறை வாக இருந்த நிலையில் 29ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. திருப்பூ ரில் பாத்திரத் தொழிலாளர் சங் கத்தில் முன்னோடியாக இருந்து செயல்பட்டவர். நீண்ட காலம் அந்த சங்கத்தின் பொருளாள ராக சிறப்பாக செயல்பட்டிருக்கி றார். திருப்பூர் முருங்கப்பாளை யம் பகுதியில் வசித்து வந்தார்  இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள். தீக்கதிர் நாளேட்டின் தீவிர வாசிப்பாள ராக இருந்தார். கடைசி நாட்க ளில் உடல் நலிவுற்ற நிலையி லும் தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு சிறப்பிதழை ஆர்வ முடன் முழுமையாக வாசித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது நடமாட்டம் குறை யும் வரை ஒவ்வொரு ஆண்டும் முருங்கப்பாளையம் பகுதியில் மே தினத்தின்போது அப்பகுதி மார்க்சிஸ்ட் கட்சியினர் அவரை அழைத்து வந்து செங்கொடி ஏற்ற வைத்தனர்.   மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.ராஜகோபால், கே.உண் ணிகிருஷ்ணன், சி.மூர்த்தி, டி. ஜெயபால், வடக்கு மாநகர செய லாளர் பி.ஆர்.கணேசன்,  வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு சென்று உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

வியாழக்கிழமை மாலை முருங்கப்பாளையம் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவ ரது விருப்பத்தின் பேரில் அவரது உடலுக்கு செங்கொடி போர்த்தப் பட்டதுடன், அடக்கம் செய்யப் பட்ட இடத்தில் செங்கொடி நடப் பட்டது. கட்சியின் முருங்கப்பா ளையம் கிளை ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

;