districts

img

அன்னவாசலுக்கு அரிசி வழங்கிய தியாகி ரத்தினசாமி குடும்பத்தார்

திருப்பூர், ஜூன் 13 -

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நடத்திவரும் அன்னவாசல் திட்டத் திற்கு, திருப்பூர் இடுவாய் தியாகி ரத்தினசாமி இளைய மகள் நந்த லாலா திருமணத்தை முன்னிட்டு, ரத்தினசாமி குடும்பத்தார் ரூபாய் 10,000 மதிப்பில் அரிசி தானம் வழங்கினர்.  

தியாகி ரத்தினசாமியின் இளைய புதல்வி ஆர்.நந்தலாலா மற்றும் முன்னாள் ரயில்வே ஊழியர் மோகன்ராஜ் புதல்வரும், சேலம் சட்ட கல்லூரி பேராசிரியர் மலரவன் ஆகியோரின் திருமண விழாவை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கட்சி நடத் தும் அன்னவாசல் திட்டத்திற்கு அரிசி தானம் வழங்கினர். திருப்பூர் பகுதியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கொரோனா  தடுப்பு உதவி மையத்தின் சார்பில்  பல்வேறு பகுதிகளில் பசித்தவர்க்கு உணவளிக்கும் அன்னவாசல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. குறிப்பாக இடுவாய், பல்ல டம், கே.ஆர்.சி சிட்டி சென்டர், அனுப் பர்பாளையம், ஊத்துக்குளி, செட்டி பாளையம், போயம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் அன்னவாசல் திட்டம் நடைபெறுகிறது.

இந்த பகுதிகளுடன், முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளி என 8  பகுதிகளுக்கு தலா 25 கிலோ அரிசி வீதம் எட்டு சிப்பம் அரிசியை தியாகி  ரத்தினசாமியின் மனைவி ஆர். லோகநாயகி, தியாகி ரத்தின சாமியின் தம்பியும், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி இடுவாய் கிளை செயலாளருமான கருப்புசாமி ஆகி யோர் முன்னிலையில் மணப்பெண் இரா.நந்தலாலா, தம்பி மகள் பாரதி ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன், திருப்பூர் கே ஆர்சி அன்னவாசல் பொறுப்பாளர் வை.ஆனந்தன், வாலிபர் சங்க முன் னாள் ஒன்றிய தலைவர் அ.ப.பாலு,  தீக்கதிர் பழனிச்சாமி, இடுவாய் வாலிபர் சங்க நிர்வாகிகள் அ.ப. இரத்தினசாமி, ஆறுமுகம், முத்து சாமி, செந்தில், தண்டபாணி, பால ரத்தினம், கிச்சு ஆகியோரிடம் வழங் கினர்.

;