districts

கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திடுக

திருப்பூர், ஜூலை 23– திருப்பூரில் கொரோனா தொற்று மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்ப துடன், ஏற்கெனவே பல்வேறு நோய்க ளுக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடி வருவோருக்கு தேவையான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தமி ழக அரசின் சுகாதாரத்  துறை முதன் மைச் செயலாளர் டாக்டர் வி.ராதாகிருஷ் ணனுக்கு வெள்ளிக்கிழமையன்று அனுப்பியிருக்கும் கடிதத்தில் கூறியி ருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று இன்னும் 8 சதவிகிதம் வரை இருப்பதால் மாவட்டத்தில் வலு வான பிரச்சாரம் செய்ய வேண்டும்.

தொற்று பரிசோதனை ஆய்வகத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும், பழைய பேருந்து நிலை யம் அருகிலுள்ள அரசு மருத்துவமனை யிலும் தொடங்கி தேவையான பணியா ளர்களை தற்காலிகமாக அதிகரிக்க வேண்டும். இம்மாவட்டத்தில் உடு மலை, காங்கேயம், தாராபுரம், அவி நாசி, ஊத்துக்குளி, பல்லடம் ஆகிய வட்டார மருத்துவமனைகளில் முழுமை யாக சி.டி. ஸ்கேன் வசதி, பணியாளர்க ளுடன் கொண்டு வர வேண்டும். உடு மலை அரசு மருத்துவமனை வளாகத் தில் நகராட்சி கையகப்படுத்திய ஒரு ஏக்கர் நிலத்தை மருத்துவமனைக்கு பயன்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ் சாலை அருகில் உள்ள அரசு மருத்துவம னைகளில் தலைக்காய அவசர சிகிச்சை பிரிவு இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய வழிகாட்டு குறிப்பில் உள்ளது.

இம்மாவட்டத்தில் அவிநாசி வட்டார மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கி றது. ஆனால் இங்கு ஸ்கேன், மருத்துவக் கட்டமைப்பு இல்லாததால், சாலை விபத்தில் பாதிக்கப்படுவோர் கோவை, திருப்பூர், ஈரோடு செல்ல வேண்டிய கட் டாயம் உள்ளது. எனவே அவிநாசியில் சிடி ஸ்கேன் கட்டமைப்பு உருவாக்க வேண்டும். அதேபோல், தென் மாவட்டங்களை இணைக்கும் போக்குவரத்து முக்கியத் துவம் வாய்ந்த தாராபுரம் அரசு மருத்துவ மனையில் படுக்கை வசதியை 150 ஆக அதிகரிக்க வேண்டும். எலும்பு முறிவு, நரம்பியல் துறை மற்றும் சி.டி. ஸ்கேன்  வசதியுடன் அதிதீவிர சிகிச்சை பிரிவு செயல்படுத்த வேண்டும். மடத்துக் குளம் அரசு மருத்துவமனையில் 40 படுக்கை வசதியை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.டி.ஸ்கேன், ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

அதே போல் தேசிய நெடுஞ்சாலை  அருகில் 4  கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊத் துக்குளி அரசு மருத்துவமனை 50 படுக்கை வசதி கொண்டுள்ள போதும் அவசர காயங்களுக்கு தையல் போடக் கூட வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இங்கும் சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். காங்கே யம் அரசு மருத்துவமனையில் 3 ஏக்கர் நிலம் இருப்பதால் கூடுதல் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். திருப் பூர் வடக்கு பகுதியில் கந்தசாமி செட்டி யார் மகப்பேறு மருத்துவமனை, வேலம் பாளையம், பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை தரம் உயர்த்த வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் மகப்பேறு மருத்துவ வளாகத்துக் கும், நூறு படுக்கை வசதி உள்ள சி.டி.ஸ்கேன் வளாகத்துக்கும் இணைப்பு பாலம் கட்ட வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சம்  தொழிலாளர்கள் இணைந்துள்ள இஎஸ் ஐயில் பிரதமர் அடிக்கல் நாட்டி பல ஆண் டுகள் கடந்தும் மருத்துவமனை கட்டப் படவில்லை. எனவே இஎஸ்ஐ மருத்துவ மனை கட்டுமானப் பணியை போர்க்கால அடிப்படையில் தொடங்கவும், சட்டரீதி யான தடைகளை நீக்கி உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்கு சாவடி மையங்கள் வாரியாக சுழற்சி முறையில் தடுப்பூசி போடுவது சரியான முடிவாக இருந்தாலும், சில பகுதிகளில் குளறுபடிகள் தொடர்கின்றன. எனவே இதனை சரி செய்ய வேண்டும். தொழிற்சாலை களில் இந்திய தொழில் கூட்ட மைப்பு போன்ற அமைப்புகள் தொழிலாளர்க ளுக்கு தடுப்பூசி செலுத்தி வருகி றது. இன்னும் அதிக அளவில் இதைக்கொண்டு சேர்க்க மாவட்ட நிர்வாகம் கண்கா ணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

இரண் டாவது அலை ஓய்ந்தாலும் அடிப்படை கட்டமைப்பை கலைத்து விடாமல் அவசர தேவை கருதி தாலுகா வாரியாக அந்த ஓரிரு மையங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும். வட்டார மருத்துவமனைகளில் போதிய ஆய்வகம், ஊழியர் வசதிகளை உறுதி  செய்ய வேண்டும்.திருப்பூர், உடுமலை, தாராபுரத்தில் தனியாக ஆக்சிஜன் உற் பத்தி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கை, வெண்டிலேட்டர் உட்பட தயார் நிலை யில் வைக்க வேண்டும். அமராவதி சர்க் கரை ஆலை எத்தனால் பிளாண்ட் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும். கோவிட் தொற்றால் மரணமடைவோ ருக்கு உரிய  சான்றிதழ் வழங்க  வேண் டும். சீர்மிகுநகரப் பகுதிகளைக் கண்கா ணிக்க மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸ் கூடுதல்படுத்த வேண்டும். இம்மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நிதி மூலம் கோவிட் தடுப்பு, மீட்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆம் புலன்ஸ் இயக்கம், இலவச காப்பீடு திட் டம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி கண் காணிக்க வேண்டும். தனியார் மருத்துவ மனைகளில் மருத்துவ கட்டணங்களை நோயாளிகள் பார்வைக்கு வெளிப்படை யாக தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், கொரோனா வார்டு  மற்றும் கழிப்பறை பராமரிப்பிற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண் டும். இவ்வாறு செ.முத்துக்கண்ணன் வலியுறுத்தி உள்ளார்.

;