districts

img

திருப்பூர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனைத்துத் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 24- திருப்பூரில் தொழிற்சங்க நிர்வாகி கள் அனைத்து தரப்பினருக்கும் தடுப் பூசி போட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழ னன்று கோரிக்கை மனு அளித்துள்ள னர். நாடு முழுவதும் கோவிட்-19 பெரும் தொற்று மிக பரவி வருகி றது. இதனைக் கட்டுப்படுத்த அரசாங் கம் தடுப்பூசி செலுத்துமாறு அறிவு றுத்தி வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவின் பேரில் வாக்குச்சாவ டிகள் மூலமாக பொதுமக்கள் தடுப் பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தார். இதன் மூலம் தடுப்பூசி போடுவதில் உள்ள  முறை கேடுகள் சிறிதளவு தடுக்கப்பட்டுள் ளது. இதனைத் தொடர்ந்து திருப்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் மற்றும் பல்வேறு மாநிலத் தைச் சேர்ந்தவர்கள் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

18 வயது  நிரம்பியவர்களின் பெயர்கள் வாக்கா ளர் பட்டியலில்  விடுபட்டுள்ளது. இத னையெல்லாம் கருத்தில் கொண்டு  இவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வாக்குச் சாவடிகள் மூலமா கவே ஏற்படுத்தித் தர வேண்டும். இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கு  தளர்வுகள் அறிவித்து, கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான, சில நிபந்தனைகள் அடிப்படையில் தொழிற்சாலைகள் இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு வழி காட்டுதலின் படி செயல்படும் தொழிற்சாலை களில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொழிற் சாலை நிர்வாகம் பொறுப்பில், ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இதனை தொழிற்சாலை நிர்வா கம் உறுதிப்படுத்த வேண்டும் என சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டி யூசி, ஹெச்எம்எஸ், எம்எல்எப்  உள் ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) சாகுல் அமீதிடம் மனு அளித்தனர். இதில், சிஐடியு சார்பில் ரங்கராஜ், சம்பத், ஏஐடியுசி சேகர், எல்பிஎப் ரங்கசாமி, சரவணன், ஐஎன் டியூசி சிவசாமி, எம்எல்எப் மனோக ரன், ஹெச்எம்எஸ் முத்துச்சாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;