districts

திருப்பூர்: வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி முகாம்

திருப்பூர், ஜன.6- இளைஞர்களுக்கான வாழ்வியல் மேம்பாட்டிற்காக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டிற்கான குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுவதாக மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசின் தேசிய தொழில் மேம்பாட்டுக் கழகம் மற்றும்  மாநில அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள் இளைஞர்களுக்கான வாழ்வியல் மேம்பாட்டிற்காக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டிற்கான குறுகிய கால பயிற்சி வழங்குகிறது. இப்பயிற்சிகளில் பங்கு பெறுவதற்கு 5 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/ பெறாதவர்கள் மற்றும் டிகிரி படித்தவர் வரை இப்பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறலாம்.  பயிற்சி பெறுபவர்களுக்கு சீருடை மற்றும் பயிற் சிக்கான கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்குபெறுவதற்கு வயது வரம்பு 18 முதல்  35 வரை ஆகும். இப்பயிற்சிகள் இலவசமாக வழங்கப் படுகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப் படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும். ஆகவே, பயிற்சிகளில் பங்கு  பெற விரும்புபவர்கள் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் திருப்பூர் 94990 - 55695, 99447 - 39810, 94990 - 55696 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருப்பூர் 86820 - 66089, 97501 - 73999, 96265 - 14180 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

;