districts

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் தற்காலிக படுக்கை வசதி

திருப்பூர், மே 18-

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியு டன் தற்காலிக படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிராணவாயு தேவை யுடன் வருகின்ற தொற்றாளர்களை உடனடியாக உள்நோயா ளியாக படுக்கையில் அனுமதிக்க இயலாத சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு உள்நோயாளியாக அனுமதிக் கும் வரையிலான காலக்கெடுவிற்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே ஆக்சிஜன் கான் சென்ட்ரேட்டர்களுடன் தற்காலிக படுக்கை வசதி ஏற்படுத்தப் பட்டு உள்ளது. இந்த தனி தற்காலிக  பிரிவு திருப்பூர் கொரோனா பைட்டர்ஸ் என்ற தன்னார்வலர்கள் குழுவினால் 24 மணி நேரத்தில் ஏற்படுத்தப்பட்டு தொற்றாளர்களின் பயன்பாட் டுக்கு வந்துள்ளது. இப்படி ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என கோரியதும் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் உடனடியாக அனுமதி வழங்கினார்.

ஏற்கெ னவே திருப்பூரில் தொற்றாளர்களின் தேவைக்காக ஆக்சி ஜன் பேருந்து வசதி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தனி பேருந்தில் ஆக்சிஜன் வசதியுடன் தொற்றாளர்களின் அவ சரத் தேவைக்கு உதவக்கூடியதாக இப்பேருந்து பயன்பாட் டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  திருப்பூர் சக்தி நர்சிங்  ஹோம், திருப்பூர் ஏற்றுமதியாளர் போரம், யங்  இண்டியன்ஸ், அரிமா சங்கம் உள்ளிட்ட தன்னார் வலர்கள் இந்த பணிகளில் ஆர்வமுடன் பங்களிப்பு செய்து கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

;