districts

img

ஆட்சியர் உத்தரவை பறக்கவிட்ட டாஸ்மாக் நிர்வாகம் முருகம்பாளையத்தில் மக்கள் மறியல்

திருப்பூர், ஜன. 13 - திருப்பூர் அருகே முருகம்பாளை யத்தில் பொது மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை மூடு வதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தர விட்ட பிறகும், காலக்கெடு முடிந்தும் கடையை மூடாமல் தொடர்ந்து நடத்தியதால் ஆவேசமடைந்த பொது  மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் முருகம்பாளையம் ஊரின் மையப் பகுதியில் பொது மக்கள்  சந்தடி மிகுந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடை எண் 1987 கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது முதல் மக்கள் கடும்  எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வருகின்றனர். பொது மக்கள், அரசி யல் அமைப்பினர், கோயில் கமிட்டி என அனைத்துத் தரப்பினரும் இணைந்து மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் உள்பட அதிகா ரிகளுக்குப் பல முறை மனுக் கொடுத் தும், பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் இந்த கடையை அகற் றுவதற்கு அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் கடைசி வாரத்தில் இப்ப குதி மக்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போதும் காவல் துறை கெடுபிடி செய்து கைது செய்வதாக மிரட்டல் விடுத்தது. அதனை மீறி இப்போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட  ஆட்சியரிடம் மீண்டும் முறையிடப் பட்டது. எனவே டிச. 29 அன்று மாவட்ட ஆட்சியர் மேற்படி டாஸ்மாக் மதுபானக் கடையை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து உத்தரவு பிறப்பித்தார். அதில் 15  நாட்களில் முருகம்பாளையம் டாஸ் மாக் கடை இடமாற்றம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

எனவே ஜனவரி 12ஆம் தேதியுடன் 15 நாள் காலக்கெடு முடிவடைகிறது. ஆனால் அதன் பிறகும் ஜனவரி 13ஆம் தேதி புதன்கிழமை டாஸ்மாக் கடை திறந்து வைக்கப்பட்டு தொடர்ந்து  விற்பனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர் வமாக உறுதியளித்தும் மீண்டும் கடையை மூடாமல் இருந்ததால் ஆவேசமடைந்த மக்கள் கடையை முற்றுகையிட முடிவு செய்தனர். பின்னர் பெண்கள் உள்பட அப்பகுதி மக்கள் சேர்ந்து முருகம்பாளையம் சாலையில் டாஸ்மாக் கடைக்கு முன்பாக மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் ஆட்சிய ரின் கடித நகலை காட்டி கடையை மூட வேண்டும் என மக்கள் வலியு றுத்தினர். இது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த காவல் துறையினர் மறியல் போராட்டத்தை கைவிடும்படி கூறினர். இதைத் தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி கடையை அடைக்கும் வரை போராட் டம் தொடரும் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

;