districts

திருப்பூர் மாவட்ட விவசாயப் பாசனத்துக்கு நீராதாரங்களை பெருக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 30– திருப்பூர் மாவட்டத்தில் விவ சாயப் பாசனப் பகுதிகளுக்கு நீர் கிடைக்கும் வகையில் நல்லாறு அணை கட்டுவது உள்ளிட்ட நீரா தாரங்களைப் பெருக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரியுள் ளது. அண்மையில் கோவையில் விவ சாயத் துறை அமைச்சர் ஏற்பாடு செய்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் அளித்த கோரிக்கை மனு வில் நீராதாரம் குறித்து தெரிவிக் கப்பட்டுள்ள விபரம் வருமாறு: தமிழ் நாடு அரசு இந்த ஆண்டு வேளாண்மை  துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதை விவ சாயிகள் சங்கம் வரவேற்கிறது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறது. பிஏபி பாசனத் திட்டத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி  பெறுகிறது.

கடந்த 15 ஆண்டு கால மாக எதிர்பார்த்த நீர் கிடைக்காமல் குறைந்த அளவே தண்ணீர் கிடைத்து வருகிறது. திருமூர்த்தி அணைக்கு, மேல் நீராற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீர் வந்து சேர  மூன்று நாட்கள் ஆகிறது. காலதாம தம் இல்லாமல் 6 மணி நேரத்தில் தண் ணீர் வந்து சேரவும், தமிழக பகுதி யில் 7 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கவும் நல்லாறு அணையை முன்னுரிமை அடிப்படையில் கட்டி முடிக்க வேண்டும். அதேபோல் அமராவதி அணை மூலம் 1 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இங்கு  மழைக் காலத்தில் தேக்க முடியா மல் உபரியாகும் நீரை தேக்கி வைக்க அப்பர் அமராவதி அணை கட்டப்பட வேண்டும். அமராவதி அணையில் இருந்து பருவமழை காலங்களில் உபரியாக வெளியேறும் நீரை குண்டடம், தாரா புரம், வெள்ளகோயில் ஒன்றியங்க ளில் வறண்ட பகுதிக்கு பயன்படுத் தும் திட்டம் கருணாநிதி முதல்வராக இருந்தபோது வரைபடம் உருவாக் கப்பட்டது. இதில், 1 டிஎம்சி கொள்ள ளவு உப்பாறு அணைக்கும், அரை  டிஎம்சி கொள்ளளவு வட்டமலை கரை அணைக்கும் அனுப்ப முடியும்.

ஆண்டுக்கு இரண்டு,முன்று முறை  நீர் நிரப்பும் வாய்ப்பு உள்ளது, அதோடு வாய்க்கால் செல்லும் வழியிலுள்ள சிறு சிறு குளங்கள், குட்டைகளில் நீர் நிரப்ப முடியும். எனவே அமராவதி ஆறு - உப்பாறு - வட்டமலை கரை அணை-- இணைப்பு கல்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றிலி ருந்து  சிறு சிறு கால்வாய்களை வெட்டி, இந்த ஆற்றில் உபரிநீர் வரும்போது பல்லடம் பகுதியில் உள்ள குளம் குட்டைகளில் நீரை தேக்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரத்துப்பாளையம் அணைக்கு செல்லும் வழியில் ஊத்துக்குளி அருகே நொய்யல் ஆற்றின் குறிக்கே தடுப்பணை ஏற் படுத்தி சாயக்கழிவு நீரை சுத்திக ரித்து இந்த அணைக்கு கொண்டு வந்து விவசாயிகளுக்கு பயன்ப டுத்த வேண்டும்.  மாவட்டம் முழுவதும் குளம், குட் டைகள், தடுப்பணைகளை தூர்வார வேண்டும்.

புதிதாக தடுப்பணை களை அமைக்க வேண்டும். சில பகுதிகளில் குறிப்பிட்ட அளவு மண் ணிற்கு கீழ் ஐந்தடி ஆழ அளவி லேயே தண்ணீர் நிலத்திற்குள் போகாத அடிப்படையில் கடுமை யான கல்ஓடை அல்லது பாறைகள் இருக்கின்றன. இப்பகுதியில் கல்ஓடை களுக்கு கீழே சென்று நிலத்தடி நீர் தேங்கும் அடிப்படையில் நீர் செறி யூட்டும் திட்டங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

;