districts

img

ஊரடங்கு விதிமுறைகள் மீறினால் கடும் நடவடிக்கை திருப்பூர் காவல் ஆணையர் எச்சரிக்கை

திருப்பூர், மே 18 -

கொரோனா பரவல் தடுப்பு ஊர டங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை களில் திருப்பூர் மாநகர காவல் துறை யினர் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசால் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு பல்வேறு கட்டுபாடு கள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாடுகளை மீறிபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டும், அபராதம் விதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் படி, திருப்பூர் மாநகரத்தில் கடந்த மே 3ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை உள்ள கால கட்டத்தில் விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது 668 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 205 டூவீலர்கள், 49 நான்கு சக்கர வாக னங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. மேலும், மாஸ்க் அணி யாதவர்கள் மீது 6987 வழக்குகளும், தனிமனித இடைவெளியை பின் பற்றாதவர்கள் மீது 221 வழக்குக ளும் பதிவு செய்யப்பட்டு ரூ.14 லட் சத்து 52 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  திருப்பூர் மாநகரத்தில் தேவை யில்லாமல் அநாவசியமாக வரும் வாகனங்கள் தடை செய்யப்படுள் ளது. இ பாஸ் எடுத்தவர்கள் மட் டுமே அனுமதிக்கப்படுவர்.

எனவே ஊரடங்கு விதிமுறைகள் கட்டா யம் கடைப்பிடிக்க வேண்டும் என மாநகர போலீசார் அறிவுறுத்தியுள் ளனர். மீறினால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்தி கேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் எஸ்பி எச்சரிக்கை அதே போல் திருப்பூர் மாவட்டத் தில் மாஸ்க் அணியாத 338 பேர் மீதும், விதி மீறிய வாகன ஒட்டிகள் 108 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 47 வாகனங் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட எல்லையில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு திங்கள் கிழமை முதல் அமலுக்கு வந்த இ பாஸ் முறை சரி பார்க்கப்பட்டு உரிய அனுமதி பெற்ற வாகனங்கள் மட் டும் அனுமதிக்கப்பட்டது. அத்து டன் அத்தியாவசிய பணிகளுக்காக சென்ற வாகனங்கள்  அனுமதிக்கப் பட்டது. ஊரடங்கு விதிகளை பின் பற்றாமல் செயல்பட்டவர்கள் மீது திங்கள் கிழமை ஒரே நாளில் முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த 338 நபர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது.  

அதேபோல்  உரிய அனுமதி யின்றி ரோட்டில் வலம் வந்த 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டு வாகன ஓட்டிகள் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் 108 வாக னங்கள் மீது விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி திசா மிட்டல் தெரி வித்துள்ளார்.

;