districts

img

துவங்கியது அதிமுகவின் தேர்தல் விதிமீறல்கள் வீடு வீடாக வேஷ்டி சேலை விநியோகம்

அவிநாசி,பிப்.26-

அவிநாசியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வேஷ்டி, சேலை விநி யோகம் செய்து வருவதை தடுத்த நிறுத்த திமுக கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி யுள்ளனர்.

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளியன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதல்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அம லுக்கு வந்துள்ளது .இந்நிலையில் அவிநாசி ஒன்றிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் பொருந்திய பையில் வேஷ்டி, சேலைகளை அதிமுகவினர் விநி யோகம் செய்து வருகின்றனர். இதனை தேர்தல் அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மேலும், இதுதொடர்பாக தேர்தல் துணை வட்டாச்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதில், திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அவிநாசி யப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், நவநீத கண்ணன், மதிமுக சார்பில் ராஜ்குமார், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் இஷாக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;