districts

கிராமப்புற விவசாயிகளுக்கு மண் பரிசோதனை விழிப்புணர்வு

திருப்பூர், ஏப்.16- கிராமப்புற விவசாயிகளுக்கு மண் பரிசோதனை விழிப் புணர்வு பயிற்சி கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் கல்லூ ரியில் இறுதியாண்டு பயிலும் வேளாண் மாணவர்கள் கிராமப் புற தங்கல் திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களாக காங்கே யம் சுற்றுவட்டார கிராமங்களில் பயிற்சி எடுத்து வரு கின்றனர். அந்த வகையில் காங்கேயம் அருகே பரஞ்சேர் வழி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண் பரிசோதனைக்கு மண் மாதிரி எடுக்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கத் துடன் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 வரையிலான இடங்க ளில் மண் மாதிரி சேகரித்து, அதனை கால் குறைப்பு முறை யில் ஒரு கிலோ அளவிற்கு பாலித்தீன் பையில் சேகரித்து மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்களை கண்டறிந்து அதற்கேற்ப பயிர்களை பயிரிடுவது குறித்து விளக்கமளித்தனர்.

;