districts

முடிதிருத்தும் கடைகளை  திறக்க கோரிக்கை

திருப்பூர், ஜூன் 24- திருப்பூர் மாவட்டத்தில் முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டுமென்று மருத்துவர் மக்கள் முன் னேற்ற கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நாடு முழுவதும் கோவிட்-19 பெரும் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் முடி திருத்தும் கடை அடைக்க வேண்டும் என தமிழக அரசால் உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள், வாழ்வா தாரம் மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவிட் நோய்தொற்று முதல் அலை காலகட்டத் தில் கடந்த கால ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்குவதாக அறி விப்பு மட்டும் வெளியிட்டு அதனை நடைமுறைப் படுத்த வில்லை. எனவே, ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள  முடி திருத்தும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, குறைந்த நேரம் கடைகளை திறக்க அனுமதி  அளிக்க வேண்டும். மேலும்,  முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;