districts

img

தரக்குறைவாக பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கண்டனம்- வெளிநடப்பு

அவிநாசி, ஜன.25- அவிநாசி ஒன்றியக்குழு கூட்டத் தில் தரக்குறைவாக பேசிய வட் டார வளர்ச்சி அலுவலரைக் கண் டித்து ஊராட்சி ஒன்றிய கவுன் சிலர் வெளிநடப்பு செய்ததால் கூட் டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பி னர்கள்  கூட்டம் ஒன்றிய அலுவல கத்தில் திங்களன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் ஜெகதீசன் தலைமை வகித் தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார்.  இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த முத்துச்சாமி பேசுகை யில், கணியம்பூண்டி பகுதியில் பட்டா பூமியில் கழிவுநீர் விடப்படு வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.  ஆகவே, இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாக்கடை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பொதுமக்கள் பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், என்றார்.

இதைத்தொடர்ந்து திமுக உறுப் பினர் சேதுமாதவன் பேசுகையில், அம்பாள் காலனி, வெற்றி நகர் உள் ளிட்ட பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு ஆறு மாதங்களாகியும், இன்னும் பணிகள் தொடங்கவில்லை. அதே போல், ஆழ்துளை கிணறு அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பல நாட்க ளாகியும் இன்னும் பணிகள் தொடங் கப்படவில்லை. எனவே, இப்பணி களை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என தெரிவித்தார். நிறை வாக ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீ சன், ஒன்றியக் குழு உறுப்பினர்க ளின் கோரிக்கைகள் உரிய ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் பங்கேற்ற பழங்கரை 10 வார்டு ஊராட்சி ஒன்றியக் குழு சுயேட்சை உறுப்பினர் கார்த்தி பேசுகையில், 15 நாட்களுக்கு முன்பு பழங்கரை ஊராட்சி குடிநீர் பிரச்சனை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி ஹரனிடம் பொதுமக்கள் முறை யிட்டுள்ளனர். அப்போது, அங்கி ருந்த பொதுமக்களிடம் ஒன்றியக் குழு உறுப்பினர் என்று கூட பாரா மல் என்னை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் தரக்குறை வாக பேசியுள்ளார். இதனை கண் டித்து இந்த கூட்டத்தை புறக் கணித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அங்கிருந்து வெளியேறினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

;