districts

img

தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுப்பு திருப்பூர் கேஸ் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப்.16- 2021 ஜனவரி 2 ஆம் தேதி முதல் எந்த காரணமும் இல்லாமல் நான்கு தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுத்து வரும் திருப்பூர் கேஸ் நிர்வாகத்தை கண்டித்து சிஐ டியு பொது தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் அவிநாசி சாலை ஓடக் காடு பகுதியில் திருப்பூர் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் எச்பி கேஸ் முகமை நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. இந்த நிறுவனத்தில் திருச் செல்வன், சுரேஷ், நாகராஜ், சிவக் குமார் ஆகிய நான்கு தொழிலா ளர்கள் நீண்ட நாட்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலை யில், 2021ஆம் ஆண்டு தொடங்கிய வுடன் ஜனவரி 2 ஆம் தேதி முதல் இவர்களுக்கு நிர்வாகம் வேலை வழங்க மறுத்து வருகிறது.

எனவே இதுபற்றி தொழிலாளர்கள் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தில் முறையிட்டனர். இதன் தொடர்ச்சி யாக சங்க மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், ஓடக்காடு முன் னாள் மாமன்ற உறுப்பினர் என்.குண சேகரன் உள்ளிட்டோர் சம்பந்தப் பட்ட திருப்பூர் கேஸ் நிர்வாகத்து டன் பேச்சுவார்த்தை நடத்தி னர். எனினும் இந்தப் பேச்சுவார்த் தையில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவது பற்றி நிர்வா கம் எந்த உத்தரவாதமும் வழங்க வில்லை.  இப்பிரச்சனை மூன்றரை மாதங் களாக நீடித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி அந்த நிறுவ னத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் முடிவு செய் தது.

அதன்படி, வெள்ளியன்று அந்த நிறுவனத்தின் முன்பாக ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது. கொரோனா தடுப்பு என்ற பெயரில் இந்த ஆர்ப் பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட் டது. எனினும், தனி நபர் இடை வெளியை கடைப்பிடித்து ஆர்ப் பாட்டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜி. சம்பத், பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் என்.சுப்பிர மணியன், சிஐடியு முன்னாள் மாவட் டக்குழு உறுப்பினர் டி. துரைசாமி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பத்தார்கள்  இந்த ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டனர்.

;