districts

img

ஆழ்குழாயை சரி செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

திருப்பூர், ஜூலை 26- திருப்பூர் மாநகராட்சி 5-ஆவது வார்டு சத்யா நகரில் தண்ணீர் பற்றாக் குறையால், பழுதாகியுள்ள ஆழ் குழாய் கிணற்றை சரிசெய்து தரக் கோரி முதலாம் மண்டல அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்திற்கு உட்பட்ட 5 ஆவது வார்டு சத்யாநகரில், விளிம்பு நிலை மக்கள் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் அன்றாட பயன்பாட்டுக்கான தண் ணீர்த் தேவைக்கு ஒரு ஆழ்துளைக் கிணறு உள்ளது. அதிலிருந்து, மின் மோட்டார் மூலம் சின்டெக்ஸ் தொட்டி களில் நீர் நிரப்பி, தெருக்குழாய்கள் வழியாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலை யில், ஆழ்துளைக் கிணற்றில் பழுது  ஏற்பட்டு, தொட்டி நிறைவதற்கே 4  மணி நேரத்திற்கு மேலாகிறது. ஆய்வு செய்த மாநகராட்சி ஊழியர்கள், குழாய்களில் ஓட்டை ஏற்பட்டுள்ளது எனக் கூறி சுமார் 30 அடி ஆழக்குழாய் களை அகற்றிவிட்டு, புதிய குழாய்கள் பொருத்தாமல், அப்படியே மாட்டிச் சென்றுவிட்டனர்.

இதனால், ஏற்க னவே வந்து கொண்டிருந்த தண்ணீர் வராமலும், பலமணி நேரம் மோட்டார் இயங்கினால்தான் தண்ணீர் தொட்டி  நிரையும் நிலை உள்ளது. இதனால் வேலைக்குச் செல்வோருக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, மின் விரயமும் ஏற்படுகிறது.  எனவே, மேற்கண்ட கோரிக் கையை உடனடியாக நிறைவேற்றக் கோரி, சத்யாநகர் பொதுமக்கள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேலம்பா ளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பி ரமணியம், கிளைச் செயலாளர் அ. உமாநாத் தலைமையில் திரண்டு சென்று, உதவிப் பொறியாளர் சந்திர சேகர், மண்டல அலுவலக கண்கா ணிப்பாளர் ராஜசேகர் ஆகியோரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, கோரிக்கையின் மீது விரைந்து நடவ டிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ச.நந்த கோபால் மற்றும் கி.சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;