districts

img

தடுப்பூசி போட விடிய விடிய காத்திருந்த மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலையீட்டால் குளறுபடி தவிர்ப்பு

திருப்பூர், ஜூன் 16- திருப்பூர் 15 வேலம்பாளையம் தடுப்பூசி மையத்தில் புதனன்று தடுப்பூசி போடுவதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் நள்ளிரவு முதல் விடிய விடிய காத்திருந்தனர். முறையான அறி விப்பும் இல்லாமல், தடுப்பூசி அலுவலர்களும் வராத நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததால் குளறுபடி தவிர்க்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் மையத்தில் தடுப்பூசி போட நூற்றுக்கணக் கான மக்கள் முதல் நாள் இரவு 12 மணி முதல் வரிசையில் நின்றிருந்தனர். ஆனால், புத னன்று காலை தடுப்பூசி போட அலுவலர்கள் வராத நிலையில் தடுப்பூசி போடப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தலையிட்டு அங்கு தடுப்பூசி போடும் பணி முறையாக தொடங்கப்படாவிட்டால் போராட்டம் நடத் தும் நிலை ஏற்படும் என்று எச்சரித்தனர். இதை யடுத்து, காவல்துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் சொன்ன அடிப்படையில், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. அதன்பின் புதன்கிழமை கோவாக் சின் தடுப்பூசி 100 பேருக்குப் போடப்படும் என்று சுகாதாரத்தறையினர் தெரிவித்தனர்.  வரிசையில் நிற்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட வேண்டும். அதில் முத லில் இருக்கும் 100 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். அதன் தொடர்ச்சியாக 101 முதல் வரிசைப்படி டோக்கன் வைத்திருப்பவர்க ளுக்கு வியாழக்கிழமை தொடர்ந்து தடுப் பூசி போடும் பணி நடைபெற வேண்டும். இடை யில் அரசியல் பிரமுகர்கள் குறுக்கீடு, மற்ற வர்கள் குறுக்கீட்டை ஏற்கக்கடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறி னர். இதனடிப்படையில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

 கூடுதலாக வரிசையில் நிற்போருக்கு அடையாள வில்லை (டோக்கன்) வழங்கப்பட்டு,  அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து தடுப்பூசி போடப் படும் என உறுதியளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ரங்கராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத்துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற னர். இதையடுத்து, பதட்ட நிலை தவிர்க்கப் பட்டு மக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுச் சென்றனர்.

;