districts

img

மருத்துவப்படி தொகையை வழங்கிடுக

திருப்பூர், பிப்.26-

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு மருத் துவப்படித் தொகையை முழுமையாக வழங் கவும், நிறுத்தப்பட்டிருக்கும் அகவிலைப் படியை உடனே உயர்த்தி வழங்கவும் வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பிரதான தொலைபேசி நிலை யம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்துக்கு ஓய்வூதியர் சங்க கிளை நிர்வாகி பரமசிவம் தலைமை வகித்தார்.  பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செய லாளர் எஸ்.சுப்பிரமணி, ஓய்வூதியர் சங்க  மாநில துணைச் செயலாளர் பா.சௌந்தர பாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர் வாகிகள் முகமது ஜாபர், குமரவேல், விஸ்வ நாதன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  இதில் 2017 ஜனவரி முதல் பென்சன் மாற்றம் செய்து உயர்த்தி வழங்க வேண் டும். விஆர்எஸ் ஓய்வூதியர்களுக்கு பாக்கி யுள்ள 8 சதவிகித கருணைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. நிறைவாக திருப்பூர் கிளை நிர்வாகி பழனிவேல்சாமி நன்றி கூறினார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் நடைபெற்ற போராட் டத்திற்கு, தமிழ்நாடு தொலைத்தொடர்புத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்புச் செயலாளர் எம்.ஜெய மணி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட  அமைப்பு உதவி செயலாளர்  மனோகரன், வட்டக்கிளை செயலாளர் ஆர்,பிரபாகரன், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட பொறுப் பாளர்கள் பி,தங்கணி, ஓ,இராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;