districts

img

காலமுறை ஊதியம் வழங்கிடுக

திருப்பூர், பிப்.25-

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா விதிஎண் 110-ன்கீழ் அறிவித்த படி அரசு ஊழியர்களாக அறிவித்து கால முறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற் றும் உதவியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து நான்காவது நாளாக காத் திருப்புப் போராட்டத்தை நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தின் முன்பாக நான்காவது நாளான வியாழக் கிழமை நடைபெற்ற போராட்டத்தில் சங் கத்தின் நிர்வாகிகள் பாக்கியம், எல்லம் மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு திருப்பூர்  மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், மாவட்டப் பொருளாளர் டி.குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  

ஈரோடு

 ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.சாந்தி தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.மணி மாலை, மாவட்ட தலைவர் ராதாமணி,   மாவட்ட பொருளாளர் எஸ்.அமுதா ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம், மாவட்ட உதவித் தலைவர் ஆர்.குராமன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த காத்திருக்கும் போராட்டத்தில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழி யர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்ட னர்.  

கோவை

கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் சாந்தி, மாவட்டச் செயலாளர் அலமேலு மங்கை, மாவட்ட பொருளாளர் ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில்  நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கவிதா தலைமை வகித்தார். மாநில செயலாளர் எம்.லில்லிபுஷ்பம், மாவட்ட பொருளாளர் எம்.ஈஸ்வரி, ஏ.தெய்வானை, எஸ்.முருகம்மாள், எஸ்.ராஜம்மாள், டி.சுமதி, என்.தெய்வானை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், சி.அங்கம்மாள் ஆகியோர்   வாழ்த்திப் பேசினர். இப்போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;