districts

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் தொடர்ந்து நடத்த வலியுறுத்தல்

திருப்பூர், ஆக.4- திருப்பூரில் பரவலாக அனைத் துப் பகுதிகளிலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்திட தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள் ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்டத் தலை வர் ஆர்.குமார், மாவட்டச் செயலா ளர் ச.நந்தகோபால் ஆகியோர் அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: பட்டியல் சாதியினர் மற்றும் பட்டி யல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டம் 2018, மிகுந்த போராட்டத் துக்குப் பிறகே நடைமுறைக்கு வந்துள்ளது. எனினும், சட்டத்தை அதன் முழு வடிவில் செயல்படுத் துவதில், உள்ள குறைபாடுகளால், வன்கொடுமை தடுப்புச் சட்டம் வலு விழக்கச் செய்யப்படுகிறது. வன்கொடுமைகளால் பாதிக்கப் படும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே, வேறு பிரிவுகளின் கீழ் வன்கொ டுமை இளைத்தவர்களால் வழக் குப் பதிவு செய்யப்படுவது என் பது நடைமுறை உண்மையாக இருக்கிறது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தக வலின் படி, 2017, 2018 ஆம் ஆண்டு களில் திருப்பூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக் குகளில், பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு இன்னமும் நீதி கிடைக்க வில்லை  என்பது மட்டுமல்ல, வழக்குகள் மீது நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்ப டுவதிலும், வழக்குகள் 6 மாத காலத்தில் முடிக்கப்பட வேண்டும் என்கிற சட்டத்தின் விதிமுறைகளும் அப்பட்டமாக மீறப்படுகின்றன என் பது தெளிவாகிறது.  பல ஆண்டுகள் நீதிமன் றத்தில் நிலுவையிலோ அல்லது குறித்த காலத்தில் குற்ற விசா ரணை அறிக்கை தாக்கல் செய்யப்ப டாமல் மிகுந்த காலம் தாழ்த்தப்ப டும் நிலையிலோ அல்லது உண் மைக்கு மாறான வழக்கு எனத் தள் ளுபடி செய்வதாகத்தான், வன்கொ டுமை வழக்குகள் உள்ளன.

வன் கொடுமைகள் நிகழ்ந்த பகுதிக ளில் இருதரப்பினரிடையே நல்லி ணக்கத்தை ஏற்படுத்தும் குறைந்த பட்ச நடவடிக்கைகள் கூட மேற் கொள்ளப்படாமல் இருப்பதும், அங்கெல்லாம் இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருப்பதும் விடை காண முடி யாத கேள்வியாகவே நீடிக்கிறது. இந்நிலையில், திருப்பூர் மாநகர காவல்துறை, அம்பேத்கர் கால னியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ள தாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணி வரவேற்கி றோம். அதேநேரத்தில் ,அடுத்து நடக்கும் கூட்டங்களில் கீழ்க்கண்ட செயல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலி யுறுத்துகிறோம்.

மக்கள் நெருக்கமாக வசிக்கும், இட நெருக் கடி மிக்க அம்பேத்கர் நகரின் தெரு வில் வைத்தே நிகழ்ச்சியை நடத்து வதற்கு மாற்றாக, கொரோனா பெருந்தொற்று நடைமுறைகளைப் பின்பற்றி பொது மண்டபத்தில், தனி மனித இடைவெளியுடன், இருக்கைகளில் அமர வைத்து, வன்கொடுமைச் சட்டம் குறித்து விளக்கம் அளித்திருக்க வேண்டும். தொற்று பரவும் என்ற அச்சத் தின்  காரணமாகவே அரசு, பள்ளி களைத் திறக்க தயக்கம் காட்டி வருகிறது.  

இந்நிலையில் குழந்தைகளைக் கூட்டமாக, தரையில் அமர வைத்து, புத்தகம், நோட்டு வழங்கும் நிகழ் வைத் தவிர்த்திருக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பதே, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய ரீதியாக நிகழ்த்தப்படு கிற அனைத்து வகையான நடவடிக் கைகளையும் குற்றம் என வரை யறுக்கிறது. எனவே, இச்சட்டம் குறித்தான விழிப்புணர்வை இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் அதிகளவில் நடத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

;