districts

திருப்பூரில் ரயில்கள் நின்று செல்ல  நடவடிக்கை எடுக்க எம்பி கோரிக்கை

திருப்பூர், ஜூலை 29- பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் முக்கிய மான ரயில்களை நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.  சுப்பராயன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு திருப் பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் வியா ழனன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொச்சி வேலியிலிருந்து புறப்பட்டு யஸ்வந்த்பூருக்கும், யஸ்வந்த்  பூரிலிருந்து புறப்பட்டு கொச்சுவேலிக்கும் செல்லும் ரயில்கள்,  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நகரமான திருப்பூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன. இதனால், திருப்பூ ரிலிருக்கும் பயணிகளுக்கும், வணிகர்களுக்கும் மிகுந்த சிர மம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரம் ஏற்றுமதி சார்ந்த  தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாநகரமாகும்.

இங்கு  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிருந்து வந்த லட்சக்கணக் கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கும் அல்லது அங்கி ருந்து திருப்பூருக்கு வருவதற்கும் பெரும்பாலும் ரயிலில் தான் பயணம் செய்கின்றனர்.தற்போது 06319 எண் கொண்ட  கொச்சுவேலிருந்து யஸ்வந்த்பூருக்கு செல்லும் கொச்சு வேலி-ஆனந்தப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் ரயில் நிலை யத்தை அதிகாலை 3.20 மணிக்கு கடக்கிறது. 06320 எண்  கொண்ட யஸ்வந்த்பூரிலிருந்து கொச்சுவேலிக்கும் செல்லும் யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் ரயில் நிலையத்தை நள்ளிரவு 12.20 மணிக்கும் கடக்கிறது.

அதேபோல், 07396 எண் கொண்ட ரயில், திருப்பூர் ரயில் நிலையத்தை நள்ளிரவு 2.40 க்கு கடக்கிறது.07395 எண் கொண்ட ரயில் திருப்பூர் ரயில் நிலையத்தை அதிகாலை 3.05 க்கு கடக்கிறது. ஆனால், இந்த நான்கு ரயில்களும் திருப்பூர் ரயில்  நிலையத்தில் நிறுத்தப்படுவது இல்லை. இதனால், இதில் பயணம் செல்லும் திருப்பூரைச் சார்ந்த பயணிகள் கோவை அல்லது ஈரோடு ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டியுள் ளது. பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனவே, மேற்கண்ட நான்கு ரயில்களும் திருப்பூர் ரயில் நிலை யத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கே சுப்பராயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

;